பிரான்ஸ்: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முன்னதாக பிரம்மாண்டமாக இரண்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர்.
இதில் முதல் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தைய இரண்டாவது நிகழ்ச்சி இத்தாலியில் ஒரு பிரம்மாண்டமான சொகுசு கப்பலில் நடைபெற்றது.

மே 29ஆம் தேதி தொடங்கப்பட்ட கொண்டாட்டத்தில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் நட்சத்திரங்கள் குடும்பத்தோடு இதில் கலந்து கொண்டுள்ளனர். விண்வெளியை கருப்பொருளாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இத்தாலியில் பயணத்தை தொடங்கிய சொகுசு கப்பலில் பிரான்ஸில் தன்னுடைய மூன்று நாட்கள் பயணத்தை முடித்தது. இதனை அடுத்து பிரான்ஸின் கேன் பகுதியில் பிரம்மாண்டமான பார்ட்டி நடைபெற்றது.
தொடர்ந்து 5 மணி நேரங்களுக்கு நடைபெற்ற பார்ட்டியில் விருந்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி கேடி பெர்ரியின்(katy perry) கண்கவர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சில்வர் நிற கவுனில் ஜொலிக்கும் கேட்டி பெர்ரி இசையால் விருந்தினர்களை மகிழ்விப்பதும், ஆட்டம் பாட்டத்துடன் அங்கிருப்பவர்கள் அதனை கொண்டாடுவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
வண்ண வாடிக்கைக்கு மத்தியில் தன்னுடைய ஹிட் பாடல்களை பாடி கேடி பெர்ரி அனைவரையும் மகிழ்வித்துள்ளார். இந்த கலைநிகழ்ச்சியை நடத்துவதற்காக கேடி பெர்ரி சுமார் 45 கோடி ரூபாயை கட்டணமாக பெற்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸில் நடைபெற்ற இந்த 5 மணி நேர பார்ட்டிக்காக அம்பானி குடும்பத்தினர் பல லட்சம் கோடிகளை செலவு செய்துள்ளனர். முன்னதாக பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது. ஏற்கனவே மார்ச் மாதம் குஜராத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்களில் புகழ்பெற்ற அமெரிக்க பாடகி ரிஹான்னா கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி பாலிவுட் இசைக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியினர் தங்களின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை உலகமே திரும்பி பார்க்கும் நிகழ்வாக இருக்க வேண்டும் என கருதுகின்றனர்.
இதற்காக பிரம்மாண்டமான முறையில் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்களை இரண்டு முறை நடத்தியுள்ளனர். ஜூலை 12ஆம் தேதி இந்தியாவில் திருமணம் நடைபெற இருக்கிறது. அப்போது பல்வேறு பிரம்மாண்டங்களுக்கு குறை இருக்காது என தெரிகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications