சென்னையில் முக்கிய மருத்துவமனை நிறுவனங்களில் ஒன்றாக மாறி வரும் காவேரி குரூப் ஆஃப் ஹாஸ்பிடல் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் விதமாக வடபழனியில் இருக்கும் போர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
வியாழக்கிழமை செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் வடபழனி போர்டிஸ் மருத்துவமனையை காவேரி மருத்துமனை நிறுவனம் சுமார் 152 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது. இந்த தொகையை மொத்தமாக பணமாக கொடுத்து கைப்பற்றலை முடிக்க உள்ளது காவேரி மருத்துமனை நிறுவனம். மேலும் ஜூலை 2023 இறுதிக்குள் கைமாற்றல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வடபழனியில் இருக்கும் போர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை குத்தகைக்கு எடுக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. அக்டோபர் 2020 இல் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை ஆற்காடு சாலையில் அமைந்துள்ளது. தற்போது இந்த மருத்துவமனை 110 படுக்கைகள் உடன் செயல்பட்டு வரும் வேளையில் 200 படுக்கைகள் வரை விரிவாக்கம் செய்ய முடியும்.
இதுக்குறித்து Fortis இன் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ டாக்டர் அசுஸ்தோஷ் ரகுவன்ஷி கூறுகையில், சென்னை மருத்துவமனையை விற்பனை செய்வது மூலம் எங்களின் ஒட்டுமொத்த லாபம் மற்றும் பிரிவின் விளிம்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும். மேலும் இந்த விற்பனை வாயிலாக மூலதனத்தை முக்கிய சந்தையில் மறுமுதலீடு செய்ய முடியும் என தெரிவித்தார்.
வடபழனி போர்டிஸ் மருத்துவமனை கையகப்படுத்துவது மூஸம் ஆழ்வார்பேட்டை மற்றும் ரேடியல் சாலையில் தற்போதுள்ள 500 படுக்கைகள் கொண்ட காவேரி மருத்துமனையில் தற்போதைய வசதிகளை சென்னையில் 750+ படுக்கைகளுக்கு மேம்படுத்த முடியும் என்று காவேரியின் நிர்வாக தலைவர் டாக்டர் எஸ் சந்திரகுமார் தெரிவித்தார்.
காவேரி மருத்துவமனை இந்த ஆண்டு மார்ச் மாதம் சிறிய அளவிலான பங்குகளை விற்பனை செய்து IIFL Asset Management Limited (IIFL AMC) நிர்வாகம் செய்யும் ஒரு தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்தில் இருந்து சுமார் 70 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டியது. இதை பயன்படுத்தி தற்போது 152 கோடி ரூபாய்க்கு வடபழனி போர்டிஸ் மருத்துவமனையை வாங்குவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications