வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற தளங்கள் உச்சத்தில் இருக்கும் காலம் இது. ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்தது ஹைக் மெசெஞ்சர் செயலி. 90ஸ் கிட்ஸ்களுக்கு இது நிச்சயம் ஞாபகம் இருக்கும்.
தகவல் பரிமாற்றத்தில் புது தொழில்நுட்பங்களை கொண்டு வந்து வெற்றி அடைந்தது ஹைக் மெசெஞ்சர். கவின் மிட்டல் தான் இதனை உருவாக்கியவர்.

யார் இந்த கவின் மிட்டல்?: பொதுவாக தொழிலதிபர்கள், தங்கள் நிறுவனத்தை பார்த்து கொள்ள தங்கள் குழந்தைகளையும் தொழிலுக்குள் கொண்டு வர முயற்சிப்பார்கள். அதற்காக அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி மேலாண்மை பயில வைத்து பின்னர் தொழில் தொடங்க வைப்பார்கள்.
அப்படி தான் ஏர்டெல் நிறுவன உரிமையாளர் சுனில் மிட்டல் , தனது மகன் கவின் மிட்டல் டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த உடன் கல்லூரி பயில லண்டன் அனுப்பி வைத்தார்.
கல்லூரி படிப்பும், பெரு நிறுவனங்களில் பயிற்சியும்: யார்க் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்த கவின் மிட்டல், பின்னர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் மேலாண்மை பயின்றார். அப்போது மெக்லாரென் ரேசிங், கூகுள், கோல்ட்மேட்ன் சச்ஸ் ஆகிய பெரு நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

பயிற்சி காலத்திலேயே சாதனை: கவின் மிட்டல் , மெக்லாரென் ரேசிங்கில் பணிபுரியும் போது ஃபார்முலா 1 அணியில் ஒரு தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார். அதாவது ஸ்டீயரிங் சக்கரங்களில் பாதையின் கொடிகளை காட்டும் அந்த தொழில்நுட்பம் நல்ல வரவேற்பை பெற்று, கவினுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது.
ஹைக் நிறுவனம் தொடக்கம்: மேற்படிப்பு மற்றும் பயிற்சிகளை முடித்து விட்டு 2011இல் இந்தியா திரும்பினார் கவின் மிட்டல். இண்டெர்நெட் வளர்ச்சி அடைந்து இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவ தொடங்கிய காலம் அது.

இதனை அடிப்படையாக கொண்டு 2022இல் ஹைக் மெசெஞ்சரை தொடங்கினார். 4 ஆண்டுகளிலேயே ஹைக் நிறுவனம் யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றது. சாட் வசதி மற்றும் வைஃபை காலிங் வசதி என தற்போது நாம் வாட்ஸ் அப்பில் பயன்படுத்தும் பெரும்பாலான வசதிகள் இதிலும் இருந்தன. லட்சக்கணக்கான இளைஞர்கள் இதனை பயன்படுத்தி வந்தனர். கால மாற்றத்திற்கு ஏற்ப இது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டது. இருப்பினும் 2019இல் இதன் செயல்பாடு முடிவுக்கு வந்தது.
கேமிங் துறையில் ஆர்வம்: இண்டர்நெட் தொழில்முனைவோர் என அறியப்படும் கவின் மிட்டல், தி ரஷ் கேமிங் யுனிவர்ஸ் செயலியில் கவனம் செலுத்தி வருகிறார். கவின் மிட்டல் 2017ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸின் அண்டர் 30 பட்டியலில் இடம்பிடித்தார், அதே போல அண்டர் 35 தொழிலதிபர் என்ற பட்டியலிலும் இடம் பிடித்தார்.


Click it and Unblock the Notifications