சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன் 2023 ஏப்ரல் 9 ஆம் தேதியன்று இன்டர்நெட்டில் இவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. ஒரு ஒளிப்பதிவாளர் அவரையே தொடர்ந்து கேமராவில் படம் பிடித்தது காவ்யாவுக்கு எரிச்சலைத் தந்தது, ஆனாலும் அவரை இணையவாசிகள் கொண்டாடினர்.
யார் இந்த காவ்யா மாறன்?: சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் டீமின் இணை உரிமையாளரான காவ்யா மாறன் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மிகவும் பிஸியாக இருந்தார். வலுவான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த காவ்யா மாறன் இப்போது IPL போடிகளின் மூலம் மக்களின் பார்வையில் தொடர்ந்து இருக்கிறார்.

சன் டிவி குரூப்பின் தலைவரும் நிறுவனருமான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன். சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் டீமின் இணை உரிமையாளராகவும் உள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த டீமின் சிஇஓவாக காவ்யா மாறன் பதவி வகித்து வருகிறார்.
காவ்யா மாறனின் பின்னணி: கலாநிதி மாறனுக்கும் காவேரி மாறனுக்கும் 1992 ஆகஸ்ட் 6 ஆம் தேதி காவ்யா பிறந்தார். அவரது தாயார் காவேரி மாறன் சோலார் டிவி கம்யூனிட்டியின் சிஇஓவாக உள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பெண்மணியாக விளங்குகிறார்.

காவ்யாவின் குடும்பம் அரசியல் பின்னணி வாய்ந்த ஒன்றாகும். அவரது தந்தை கலாநிதி மாறன் மறைந்த தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பேரன் ஆவார். காவ்யாவின் சித்தப்பா தயாநிதி மாறன் மத்திய முன்னாள் அமைச்சர் ஆவார்.

காவ்யா மாறனின் சொத்து மதிப்பு: அவருக்குள்ள பின்னணியில் காவ்யா மாறனின் நிகர சொத்து மதிப்பு ரூ.409 கோடியாகும். 2019 ஆம் ஆண்டு ஹருண் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் காவ்யாவின் தந்தை கலாநிதி மாறன் இடம்பெற்றுள்ளார்.

அவரது சொத்து மதிப்பு ரூ.19,000 கோடி ஆகும். சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை நிர்வகித்து வரும் காவ்யா மாறன் அத்துடன் சன் டிவி நெட்வொர்க்கின் வணிக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

காவ்யா மாறனின் கல்வி: சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் பட்டமும், இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற காவ்யா, தனது பன்முகப் பொறுப்புகளுக்கு வலுவான கல்விப் பின்னணியைக் கொண்டு வருகிறார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications