பங்குச்சந்தையில் அவ்வப்போது புதிய ஐபிஓ-க்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் கிட்டத்தட்ட அனைத்து ஐபிஓக்களும் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பல முன்னணி நிறுவனங்களின் ஐபிஓ வெளியிடுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தின் ஐபிஓ இன்று தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா
இந்தியாவின் முன்னணி மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா என்ற நிறுவனத்தின் ஐபிஓ இன்று அதாவது நவம்பர் 10ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இன்று முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை இந்நிறுவனத்தின் ஐபிஓ சந்தையில் பட்டியலிடப்பட்ட மென்றும் விருப்பமுள்ளவர்கள் அதை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.530 கோடி
கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ 650 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 530 கோடி ரூபாயாக தனது இலக்கை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பங்குதாரர்கள் வசம் மட்டும் சுமார் 56 லட்சம் பங்குகள் இருப்பதாகவும் அந்தப் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடன்
கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா நிறுவனம் ஏற்கனவே கடனில் இருப்பதால் கடனை திருப்பி அடைக்க பங்குகள் மூலமாக நிதி திரட்டப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் நடைமுறை மூலதன செலவு திட்டத்திற்கு ஐபிஓ மூலம் திரட்டப்படும் தொகையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலை
மைசூரை அடிப்படையாகக் கொண்ட கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா நிறுவனம் தமிழகம் உள்பட 8 இடங்களில் தொழிற்சாலைகளை வைத்துள்ளது என்பதும், இந்நிறுவனம் ஐபிஓ வெளியீட்டிற்குப் பிறகு நல்ல லாபத்தை நோக்கி செல்லும் என்று கூறப்பட்டு வருகிறது.
நிதி ஆலோசகர்கள்
எனவே இந்த நிதி ஆலோசகர்களின் ஆலோசனையை கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியாநிறுவனத்தின் பங்குகளை வாங்குவது குறித்து முதலீட்டாளர்கள் முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications