இந்தியா முழுவதும் டிஜிட்டல் பண பரிமாற்ற சேவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலிலும் UPI பேமெண்ட் சேவை வந்துள்ளது.
கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இனி பேடிஎம் UPI அல்லது Wallet ஐ பயன்படுத்தி பேடிஎம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து நன்கொடை அளிக்கும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பக்தர்கள் நன்கொடை அளிக்க கையில் பணத்தை கொண்டு செல்ல அவசியம் இல்லை.

இதற்காக எவ்விதமான தனிப்பட்ட ஏற்பாடுகளும் தேவையில்லை, தற்போதும் கடைகளில் நாம் எப்படி பேமெண்ட் செய்கிறோமோ, அதேபோல் தான் கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் ஸ்கேன் செய்து நன்கொடை அளிக்கலாம். இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம்-ஐ One97 Communications Ltd என்ற நிறுவனம் நிர்வாகம் செய்தும், இயக்கியும் வருகிறது.
இது மட்டும் அல்லாமல் பேடிஎம் Super App மூலம், இந்தியா முழுவதிலும் இருக்கும் பக்தர்கள், உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள ருத்ரபிரயாக்கில் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு தங்கள் வீடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாம் என்று IANS அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் QR மற்றும் மொபைல் பேமெண்ட்டுகளின் முன்னோடியாக இருக்கும் பேடிஎம் கேதார்நாத் கோவிலின் கதவுகளில் டிஜிட்டல் நன்கொடை பெறுவதற்கான கட்டமைப்புகளை உறுவாக்கியுள்ளோம், அங்கு பக்தர்கள் சன்னதியில் Paytm QR குறியீட்டை ஸ்கேன் செய்து Paytm UPI, Paytm Wallet மற்றும் பலவற்றின் மூலம் பணம் செலுத்தலாம் என்று பேடிஎம் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.
கேதார்நாத் கோவிலுக்கான யாத்திரை ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் பேடிஎம்-ன் சேவை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பல கோவில்களில் காணிக்கை கூட UPI மூலம் செலுத்தும் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, டிஜிட்டல் பேமெண்ட் சேவை இந்தியாவில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை தொட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications