கூட்டணி ஆட்சியில் இந்த நிறுவனங்களின் பங்குகள் உயர வாய்ப்பு? ஆய்வாளர்கள் கூறுவது என்ன

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசுக்கு ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் ஆதரவு தந்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் மூலம் ஆந்திராவை சேர்ந்த சில நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வளர்ச்சியை காண்பதற்கான வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் செபியில் பதிவு செய்யப்பட்ட ஆய்வாளரான சுனில் கஜார், மணி கண்ட்ரோல் தளத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர்களை பகிர்ந்துள்ளார்.

ஆந்திரா சுகர் (Andhra Sugar): சர்க்கரை மற்றும் சர்க்கரை தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வரக்கூடிய, இந்த நிறுவனம் 1952 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ரசாயனங்கள், உரங்கள் மற்றும் மருந்து உற்பத்தியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. 2024ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 1,150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இதில் 53 கோடி லாபம் ஆகும் .

கூட்டணி ஆட்சியில் இந்த நிறுவனங்களின் பங்குகள் உயர வாய்ப்பு? ஆய்வாளர்கள் கூறுவது என்ன

கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்(KNR Constructions): இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களில் சாலை, நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் பாசன திட்டங்கள் மற்றும் நீர் கட்டமைப்புகளை மேலாண்மை செய்து வரக்கூடிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது . இந்த நிறுவனம் 2024-ஆம் நிதி ஆண்டில் சுமார் ரூ. 4000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது இதில் ரூ. 493 கோடி லாபம் ஆகும்.

லிகிதா இஃன்ப்ரா (Likhitha Infra): 1998-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கும், நகர்ப்புறங்களை சேர்ந்த எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கும் பைப் லைன்களை போடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் நகர்ப்புறங்களில் செயல்படக்கூடிய எரிவாயு விநியோக நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 422 கோடி, இதில் 63 கோடி ரூபாய் லாபம் ஆகும்.

நைல் லிமிடெட்(Nile Ltd): ஈயம் மற்றும் ஈயம் சார்ந்த பொருட்களை இரண்டாம் நிலையாக உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம். ஆந்திராவில் இரண்டு ஆலைகளை நிறுவி அதில் ஒரு ஆண்டுக்கு ரூ. 1.07 லட்சம் டன்கள் ஈயத்தை தயாரித்து வருகிறது. 2024ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ. 837 கோடி ரூபாய் நிகர லாபம் ரூ. 31.6 கோடி ரூபாய்.

என்எம்டிசி ( NMDC) : இரும்புத்தாது உற்பத்தி நிறுவனமான இது மத்திய அரசுக்கு கீழ் செயல்படுகிறது. மத்திய ஸ்டீல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட ரூ. 21,294 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருந்தது. இதில் ரூ. 5,600 கோடி ரூபாய் லாபம். ஓராண்டு காலத்தில் 21% வளர்ச்சி அடைந்துள்ளது இந்நிறுவனம்.

ஆந்திரா வங்கி(Andhra Bank) :யூனியன் வங்கியின் துணை நிறுவனமான ஆந்திரா வங்கி 1992 ஆம் ஆண்டு முதல் வங்கி சாராத நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

என்சிசி லிமிடெட் (NCC Ltd): என்சிசி லிமிடெட் 1978ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது நீர் மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பு திட்டங்கள், போக்குவரத்து திட்டங்கள் சுரங்க பணிகள் மற்றும் மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ. 20,844 கோடி ரூபாய், இதில் லாபம் ரூ. 235 கோடி ரூபாய்.

ஆந்திரா பெட்ரோ (Andhra Petro): ஆந்திரா சுகர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய ஆந்திரா பெட்ரோ நிறுவனம் பெயிண்ட் ,லூப்ரிகன்ட்ஸ் உள்ளிட்டவருக்கு தேவையான ரசாயனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் 2024ஆம் நிதியாண்டில் ரூ. 788.67 கோடி ரூபாய் வருமானத்தையும், ரூ. 63.4 கோடி லாபத்தையும் பெற்றுள்ளது.

பென்னார் இண்ட் (Pennar Ind): ஸ்டீல் உற்பத்தி செய்யக்கூடிய இந்த நிறுவனம் ஆட்டோமோட்டிவ் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 2,495 கோடி வருமானம் பெற்றுள்ள இந்த நிறுவனம் ரூ. 59.3 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.

ஆந்திரா பேப்பர் (Andhra Paper) : ஆந்திராவை சேர்ந்த பேப்பர் மற்றும் பல்ப் உற்பத்தியாளரான ஆந்திரா பேப்பர் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ராஜமுந்திரி மற்றும் கடியம் பகுதிகளில் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ள ஆந்திரா பேப்பர் நிறுவனம் 2024 ஆம் நிதியாண்டில் 1895 கோடி ரூபாய் வருமானத்தையும் ரூ. 339.7 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது.

அல்காலி மெட்டல்ஸ்(Alkali Metals): 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆலைகளுக்கு தேவையான ரசாயனங்களை தயாரித்து வழங்கி வருகிறது. 2024ஆம் நிதியாண்டில் ரூ. 83.8 கோடி ரூபாய் வருமானமும், ரூ. 1.1 கோடி ரூபாய் லாபமும் பெற்றுள்ளது.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் (Heritage Foods): பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் முன்னணி உற்பத்தியாளராக திகழ்ந்து வருகிறது இந்த நிறுவனம். தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 45 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வருங்காலங்களிலும் இது உயரக்கூடும் என தெரிகிறது. 2024 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ. 3,746 கோடி ரூபாய் இதில் ரூ. 91 கோடி ரூபாய் லாபம் ஆகும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+