மும்பை: இந்திய பங்குச்சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் மல்டி பேக்கர்களாக மாறி முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்திலேயே லாபமீட்டி தருகின்றன. அப்படி இரண்டு ஆண்டுகளில் பல மடங்கு லாபம் தந்த பங்கு குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.
KEI Industries Ltd என்ற நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்து இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மல்டி பேக்கர் பங்கு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1449 ரூபாய்க்கு வர்த்தகமானது தற்போது இதன் ஒரு பங்கு மதிப்பு 4,429 ரூபாய் என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி 4429 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 842 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் வீடு மற்றும் ஆலைகளுக்கு தேவையான மின்சார கம்பிகளை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 41,740 கோடி ரூபாய் .
கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 35 .18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 2822 ரூபாய், 52 வார காலம் அதிகபட்ச மதிப்பு 5040 ரூபாய்.
இந்த நிறுவன பங்கு கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் ஃபேஸ் வேல்யூ 2ஆகவும், புக் வேல்யூ 571.18 ஆகவும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானத்தை பார்க்கும்போது 2024 ஆம் ஆண்டு 8,153 கோடி வருமானமும் அதில் 581 கோடி ரூபாயை லாபமாகவும் பெற்றுள்ளது.
நிறுவன பங்குகளில் 35 சதவீதம் பிரமோட்டர்கள் வசமும், 28.94 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசமும் இருக்கிறது. 17.57 சதவீத பங்குகளை மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வைத்திருக்கின்றன.
இதனிடையே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு அடுத்தடுத்து உயரும் என பங்குச்சந்தை சார்ந்த தரகு நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் இந்த நிறுவனத்தின் பங்கு 19 சதவீதம் உயர்ந்து 5150 ரூபாய் என்ற அளவை எட்டும் என கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு அட்ராக்டிவ் வேல்யூ என்ற மதிப்பீட்டில் இருப்பதாக மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கூறுகிறது.
ஒருவேளை அரசு மேற்கொண்டுள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள் மந்தமடைந்தால் மட்டுமே இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது ஆனால் தற்போது அவ்வாறு ஏற்படும் சூழல் இல்லை என தெரிவித்துள்ளது. டெக்னிக்கல் ரீதியான ஆய்வுகளும் நிறுவன பங்கு வளர்ச்சி அடையும் என்பதை காட்டுவதாக கூறியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications