பிரிட்டன் நாட்டில் பொதுத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து முடிந்து எக்சிட் போல் முடிவுகள் உலக நாடுகளுக்கு நேற்று அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று காலை பிரிட்டன் நாட்டு மக்கள் பரபர தேர்தல் முடிவுகள் உடன் எழுந்தனர்.
இன்று காலை இந்திய நேரப்படி 10 மணியளவில், 650 தொகுதியில் 550 தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி சுமார் 373 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைக் காட்டிலும் சுமார் 183 இடங்கள் அதிகமாகும், இதேபோல் இந்த 550 தொகுதிகளில் லேபர் கட்சியினர் 35.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதேபோல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, வெறும் 90 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இது கடந்த தேர்தலைக் காட்டிலும் 202 இடங்கள் குறைவு, வாக்கு வங்கியைப் பார்க்கும் போது 22.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் 3வது பெரும் கட்சியாக Liberal Democrat உருவெடுத்து சுமார் 11. 3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
பிரிட்டன் நாட்டில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்பது கடந்த 3 வருடங்களாக மக்கள் மத்தியில் இருக்கும் முக்கியமான கருத்தாக உள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி எடுத்த பல முடிவுகள் அந்நாட்டு மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
இது மட்டும் அல்லாமல் கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த பிரிட்டனும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த வேளையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது உயர்மட்ட சகாக்கள் உடன் சேர்ந்து பார்டி செய்தது. பல அமைச்சர்கள் மோசமான சர்ச்சையில் சிக்கி பதவியில் இருந்து நீக்கப்பட்டது போன்ற பல விஷயங்கள் பிரிட்டன் மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் மீதான நம்பிக்கையை இழக்க முக்கியமான காரணமாக இருந்தது.
பொதுவாக ஒரு நாட்டின் பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தால் முதலீட்டுச் சந்தையில் கட்டாயம் தடுமாற்றம் இருக்கும் ஆனால் பிரிட்டனில் இத்தகைய மாற்றம் இருக்காது. காரணம் இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோற்பது நிச்சயம், லேபர் கட்சி தான் வெற்றி பெறும் என முன்கூட்டியே மக்களும், முதலீட்டாளர்களும் முடிவு செய்த காரணத்தால் முதலீட்டு சந்தையில் தடுமாற்றம் இருக்காது.
பிரிட்டனில் ஆட்சி மாற்றம் என்பது பிரிட்டன் நாட்டுடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகளுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கப்போகிறது. ஏற்கனவே பிரெக்சிட் காரணமாகப் பிரிட்டன் - ஐரோப்பிய மத்தியிலான வர்த்தகம், வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் லேபர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமராக ஆட்சி அமைக்கப்போகும் வேளையில், உலக நாடுகளுக்கான வர்த்தக கதவுகள் விசாலமாக திறப்பாரா அல்லது பிரிட்டன் நாட்டின் முக்கிய நடப்பு நாடுகளுக்கு மட்டும் கதவுகளைத் திறப்பாரா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
மறுபுறம் லேபர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான கட்சி பெரும்பான்மை உடன் வெற்றிபெறப் போகும் வேளையில் நிலையான ஆட்சி அமைவது உறுதி மட்டும் அல்லாமல் நாடாளுமன்றத்தில் தனி பெரும்பான்மை உடன் முடிவுகளை எடுக்க முடியும்.
இது பிரிட்டன் நாட்டின் வளர்ச்சிக்கு தற்போது மிகவும் முக்கியமானதாகி உள்ளது, தனிப் பெரும்பான்மை கொண்ட ஆட்சி காரணமாகப் பிற நாட்டு முதலீட்டாளர்கள் பிரிட்டனில் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யும் இடமாக தற்போது மாறியுள்ளது.
இதனால் லண்டன் சர்வதேச முதலீட்டாளர்களின் safe haven ஆக மாறியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications