லண்டன்: பிரிட்டன் தேர்தல் முடிவுகள் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, 14 ஆண்டுகளுக்குப் பின்பு கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி ஆட்சியை அமைக்க இருக்கும் காரணத்தால் இந்தியா உடனான பிரிட்டன் உறவு முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
கெய்ர் ஸ்டார்மர்-ன் லேபர் கட்சி 650க்கு 390 இடங்களில் வெற்றிபெற்று இருக்கும் வேளையில் புதிய பிரதமராகத் தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது. பிரதமரான பின்பு கெய்ர் ஸ்டார்மர் முதல் மாதத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

கெய்ர் ஸ்டார்மர் இந்த தேர்தலில் பிரெக்சிட் தொடர்பான பல வாக்குறுதியைக் கொடுத்திருக்கும் இதேவேளையில் வெளியுறவுக் கொள்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகப் பல முறை அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் இந்தியா - பிரிட்டன் மத்தியிலான வர்த்தக உறவு, நட்புறவு ஆகியவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கெய்ர் ஸ்டார்மர்-ன் பிரதமரான பின்பு முதல் 3 மாத நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சமாக இருக்கப்போவது இங்கிலாந்து-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதாகும். வரலாற்றுத் தவறுகளை ஒப்புக்கொண்டு, குறிப்பாகக் காஷ்மீர் போன்ற பிரச்சினைகளில் லேபர் கட்சியின் நிலைப்பாடு, இந்தியாவுடன் ஒரு புதிய சக்தியாக இருக்கும் என இந்தியா உடனான நட்புறவை வலிமையாக்குவதற்கு ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்தியா - பிரிட்டன் இடைய ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் (FTA) மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி, கிளைமேட் சேஞ்ச் ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்கான வாக்குறுதியைக் கொடுத்துள்ளார். இதேபோல் இந்தியா உடனான நட்புறவில் கெய்ர் ஸ்டார்மர் சாதகமாகவே உள்ளது.
மேலும் இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான உறவுகளைச் சீர்செய்யும் முயற்சியில், கெய்ர் ஸ்டார்மர் தனது பிரச்சாரத்தின் போது, இந்துபோபியாவைக் (Hinduphobia) கண்ணோட்டத்தைக் கண்டித்து, தீபாவளி மற்றும் ஹோலி போன்ற விழாக்களைக் கொண்டாடி, இந்த தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் வெளிநாட்டினரையும் கவர்ந்தார்.
இது அனைத்தும் தேர்தலுக்கு முன்பு நடந்தது, ஆட்சியைப் பிடித்திருக்கும் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா உடனான வெளியுறவுக் கொள்கை, ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம், இருதரப்பு ஒப்பந்தம், இமிகிரேஷன், தற்காலிக விசா போன்றவற்றில் எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமானது. இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications