நைரோபி : கென்யா நிறுவனத்தோடு அதானி குழுமத்திற்கு சொந்தமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு இருந்த 736 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு கென்யா உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், பொது மற்றும் தனியார் பங்களிப்பு என்ற பிரிவின் கீழ் கென்யாவின் அரசு நிறுவனமான எலக்ட்ரிக்கல் டிரான்ஸ்மிஷன் கம்பெனியோடு இணைந்து ஒப்பந்தம் செய்தது.
இதன்படி கென்யாவில் மின்சார உற்பத்திக்கான கட்டமைப்புகளை நிறுவுவது செயல்படுத்துவது மற்றும் மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது ஆகிய பணிகளை மேற்கொள்வதாக இருந்தது. அக்டோபர் மாத தொடக்கத்தில் 736 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது கென்யாவில் தற்போது நீடிக்கும் மின்சார பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் எனவும், இது கென்யாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றும் கென்யா அரசாங்கம் தெரிவித்தது. 30 ஆண்டு காலத்திற்கு அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனமும் கென்யா அரசு நிறுவனமும் இணைந்து செயல்படுவது என இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கென்யா சட்ட அமைப்பு என்ற அமைப்பு அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தம் கென்யாவின் அரசியல் சாசன அமைப்புக்கே அவ மதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தென்ய அரசின் சட்டத்தின் படி அர்த்தமுள்ள பொது பங்களிப்பு இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை எனவும் வாதிட்டது.
ஆனால் கென்யா அரசோ தாங்கள் ஏற்கனவே வெளிப்படையாக இதற்கான ஒப்பந்த புள்ளி கோரியதாகவும் அதன் அடிப்படையில் தான் இந்தியாவை சேர்ந்த கௌதம் அதானி நிறுவனத்தை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தது. இருப்பினும் கென்ய உயர்நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிப்பது மற்றும் விரிவாக்கம் செய்யும் பொறுப்பினை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தையும் கென்யா அரசு மேற்கொண்டது.
ஆனால் கென்யா உயர் நீதிமன்றம் அந்த ஒப்பந்தத்திற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. 1.85 பில்லியன் டாலர்களை இந்த விமான நிலைய குத்தகைக்காக அதானி குழுமத்திற்கு வழங்குவது நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டால் சாத்தியமில்லாதது என கென்யா சட்ட அமைப்பு வழக்கில் வாதிட்டது.
இது மிகப்பெரிய நிதி சிக்கலை கென்யா அரசுக்கு ஏற்படுத்தும் எனக் கூறியிருந்தது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக நீதித்துறை மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அதன் பிறகு இதற்கு அனுமதி கொடுப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறிய கென்ய உயர்நீதிமன்றம் தற்காலிகமாக இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதித்துள்ளது.
Written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications