கென்யா நாட்டின் அதிபரான வில்லியம் ரூட்டோ திடிரென இன்று அதானி குழுமம் அந்நாட்டின் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை கைப்பற்ற மிகவும் ஆர்வத்துடன் முன்மொழிந்த கொள்முதல் செயல்முறையை (procurement process) ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்க குற்றவியல் துறை அதானி குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்த வழக்கு அதானி குழுமத்தை 360 கோணத்திலும் இன்று தாக்கியுள்ளது.
இந்த வழக்கின் காரணமாக அதானி குழும நிறுவனப் பங்குகள் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது மட்டும் அல்லாமல் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 2.25 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது, அதேபோல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 83000 கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

கௌதம் அதானியை காலையில் அமெரிக்க புரட்டிப்புரட்டி அடித்த நிலையில், மாலையில் கென்யா புரட்டிப்போட்டு அடிக்கிறது. கென்யா நாட்டின் அதிபரான வில்லியம் ரூட்டோ தனது முதல் அறிவிப்பில் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து அவர் அடுத்த அறிவிப்பில் மற்றொரு குண்டை தூக்கிப்போட்டார்.
வில்லியம் ரூட்டோ விமான நிலைய விரிவாக்க திட்டத்தை ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், கென்ய அரசு, அதானி குழுமத்தின் துணை நிறுவனத்துடன் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான மின் பரிமாற்ற லைன்களை அமைக்க கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.
அமெரிக்க குற்றவியல் துறை, கௌதம் அதானி, அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகளின் மீது பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஊழல் மற்றும் மோசடி திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 2100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்திய அரசிடம் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க குற்றவியல் நீதிமன்றம், FBI, SEC குற்றம்சாட்டியுள்ளது.
அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை "அடிப்படையற்றவை" என்றும் முழுமையாக மறுப்பதாக அறிவித்தாலும், அமெரிக்க SEC பிடிவாரன்ட் விடுத்துள்ளதால் கௌதம் அதானி இனி அமெரிக்க எல்லைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், கென்யா மின் பரிமாற்ற நிறுவனத்துடன் 30 ஆண்டு, 736 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொது-தனியார் கூட்டாணி ஒப்பந்தத்தில் கடந்த அக்டோபர் மாதம் கையெழுத்திட்டது. ஆனால் கென்ய நீதிமன்றம் அதே மாதத்தில் இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, தற்போது ரத்து செய்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications