இந்தியாவிலேயே முதல் மாநிலமாகக் கேரளா வங்கிச் சேவையில் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் இந்த அங்கீகாரம் கேரள மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பெரிய அளவில் உயர்த்தும் என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இந்தியா தனது அடுத்தகட்ட வளர்ச்சியை டிஜிட்டல் சேவை, உற்பத்தி, ஏற்றுமதியில் அடையும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ள நிலையில் டிஜிட்டல் சேவை அனைத்து துறையின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைய உள்ளது.
டிஜிட்டல் நிதியியல் சேவை மூலம் பணப் பரிமாற்றம் எளிதாகுவது மட்டும் அல்லாமல் வரி ஏய்ப்புகள் முதல் பல நிதியியல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இந்த நிலையில் கேரளா மாநிலம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வங்கிச் சேவையில் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது.
கேரளா
கேரளாவில் வங்கிச் சேவை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வங்கித் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றுடன் உள்ளாட்சி நிறுவனங்களின் சமூகத் தலையீடுகள் மூலம் இந்தச் சாதனை சாத்தியமானது என நிகழ்வொன்றில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.
100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கல்
இதற்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் கேரளாவை நாட்டிலேயே முதல் முழு டிஜிட்டல் வங்கி மாநிலமாக அறிவிக்க விரும்புகிறேன் என்றும் பினராயி விஜயன் கூறினார்.
டிஜிட்டல் சேவை
டிஜிட்டல் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும், அனைத்து மட்டத்திலும் அணுகுவதற்கு, டிஜிட்டல் பிளவுகளை முற்றிலுமாக அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதேபோல் இக்கூட்டத்தில் கேரளா மாநிலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் K-FON திட்டத்தைக் குறித்தும் பேசினார்.
K-FON திட்டம்
கேரளமாநில அரசின் கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் (K-FON) திட்ட பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், இது கட்டாயம் மக்கள் மத்தியில் இருக்கும் டிஜிட்டள் பிளவுகளைக் கட்டாயம் குறைக்கும் என்வும், டிஜிட்டல் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் எனத் தெரிவித்தார் பினராயி விஜயன்.
17,155 கிலோமீட்டர் பைபர் ஆப்டிக் நெட்வொர்க்
அனைவருக்கும் இண்டர்நெட் சேவை என்பது தான் K-FON திட்டத்தின் அடித்தளம், இத்திட்டத்தில் கேரள மாநிலத்தில் சுமார் 17,155 கிலோமீட்டர் வரையிலான பைபர் ஆப்டிக் நெட்வொர்க் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம் முடிந்த பின்பு கேரள மாநில மக்களுக்குக் குறைவான விலையில் அல்லது இலவசமாக இண்டர்நெட் சேவை அளிக்கப்பட உள்ளைம் எனப் பினராயி விஜயன் கூறினார்.
3 டிஜிட்டல் இந்தியா விருதுகள்
டிஜிட்டல் துறையின் முன்னேற்றத்திற்காகக் கேரளாவுக்கு 3 டிஜிட்டல் இந்தியா விருதுகள் கிடைத்துள்ளதையும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார். க்ஷீரஸ்ரீ போர்ட்டலுக்கு வெள்ளிப் பதக்கமும், டிஜிட்டல் பணியாளர் மேலாண்மை அமைப்புக்கான பிளாட்டினம் விருதையும், கோட்டயம் மாவட்ட நிர்வாகத்திற்குத் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளோம் என்று விஜயன் கூறினார்.
கூகுள், மைக்ரோசாப்ட் சிஇஓ
சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா ஆகியோர் மோடியை சந்தித்த போது இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பின் வளர்ச்சி குறித்துப் பாராட்டினர். மேலும் இந்தியாவின் இந்த டிஜிட்டல் பயணத்தில் பங்குகொள்ள ஆர்வமாகவும், பெருமைப்படுவதாகத் தெரிவித்தனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications