கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் இந்த வருடம் 2வது முறையாகப் பத்மநாப சுவாமி கோவிலின் திருவுருவ சிலைகள் செல்வதற்காகத் தனது ஓடுபாதை மற்றும் விமான இயக்கத்தை 5 மணிநேரம் செவ்வாய்க்கிழமை நிறுத்தியுள்ளது.
வருடத்திற்கு 2 முறை பழமையான பத்மநாப சுவாமி கோவிலின் சம்பிரதாய ஊர்வலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகச் செல்லும் போது விமான இயக்கத்தை நிறுத்தி ஓடுபாதையில் மூடப்படும்.
இதற்காக 5 மணிநேரம் விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டது மட்டும் அல்லாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாக, ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் அல்பசி ஆராட்டு ஊர்வலத்துக்காக, பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கை சுமுகமாகத் தொடர்வதற்கும், வசதியான சூழ்நிலையை உருவாக்கவும் நவம்பர் 1, 2022 அன்று 1600 முதல் 2100 மணி நேரம் வரை விமானச் சேவைகள் நிறுத்தப்படும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில்
ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் பாரம்பரிய நடைமுறையின்படி, கோயில் உற்சவ சிலைகளை ஊர்வலமாக ஆண்டுக்கு இரண்டு முறை புனித நீராடுவதற்காக விமான நிலையத்திற்குப் பின்னால் உள்ள கடலுக்குக் கொண்டு செல்லப்படும். இது 1932 இல் விமான நிலையம் நிறுவப்படுவதற்கு முன்பே இந்த வழியில் நடந்து வருவதால் இன்றும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
புனித நீராடல்
ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் உற்சவ சிலைகளைப் புனித நீராடுவதற்காகச் செல்லப்படும் ஊர்வலம், மார்ச் - ஏப்ரல் மற்றும் அக்டோபர் நவம்பர் காலகட்டத்தில் நடக்கும். இந்த 5 மணிநேர காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உற்சவ சிலைகளை ஊர்வலத்திற்காகக் குறைந்தது 10 விமானங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள்.
வருடத்திற்கு 2 முறை
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் இதுநாள் வரையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் வருடத்திற்கு 2 முறை இந்த ஊர்வலத்திற்காக விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டது, இந்த வழக்கம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமம் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்பும் நடக்கிறது.
75 விமானங்கள்
இன்று இந்தியா முழுவதும் ஓரே நாளில் 75க்கும் அதிகமான இந்திய பயணிகள் போக்குவரத்து விமானங்கள் பராமரிப்பு மற்றும் என்ஜின் தொடர்பான பிரச்சனைகள் காரணமாகத் தற்போது தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான CAPA செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
10-12 சதவீதம்
தற்போது தரையிறக்கப்பட்டு உள்ள 75 விமானங்கள் இந்திய விமானப் போக்குவரத்தில் மொத்த விமானத்தில் 10-12 சதவீதமாகும். இந்த விமானங்கள் அனைத்தும் பராமரிப்பு அல்லது என்ஜின் தொடர்பான பிரச்சனைகள் காரணமாகத் தரையிறங்கியுள்ளன.
நிதி நிலை பாதிப்பு
விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதன் மூலம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் விமான நிறுவனங்களின் நிதி நிலைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான CAPA தெரிவித்துள்ளது.
தரையிறக்க
விமானங்கள் தரையிறக்கப்பட்டதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால விநியோகங்களைப் பாதிக்கும், இதோடு விநியோகச் சங்கிலி சிக்கல் மூலம் நிறுவனங்களின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ இதுவரை எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications