கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிய காவல்துறையினருக்கு சீருடைகளை வழங்கி வரும் கேரள மாநிலத்தில் உள்ள ஆடை நிறுவனம், இஸ்ரேல் நாட்டில் அமைதி திரும்பும் வரை புதிய ஆர்டர்களை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கேரள தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கூத்துபரம்பு என்ற இடத்தில் சீருடை உற்பத்திப் பிரிவைக் கொண்டு உலகம் முழுவதும் ஆடைகளை ஏற்றுமதி செய்து வரும் மரியன் அப்பேரல் பிரைவேட் லிமிடெட், இஸ்ரேல் இடையேயான போரின் பின்னணியில் தனித்துவமான இஸ்ரேலிய தொடர்பைப் பற்றி கடந்த சில நாட்களாக செய்திகளில் உள்ளது.

"மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் குண்டுவீச்சு மற்றும் அப்பாவி மக்களைக் கொல்லும் அணுகுமுறைக்கு தார்மீக ஆட்சேபனை இருப்பதால், இஸ்ரேல் நாட்டில் அமைதி திரும்பும் வரை, இஸ்ரேலின் மேலதிக உத்தரவுகளை ஏற்க வேண்டாம் என்று மரியன் அப்பேரல்ஸ் முடிவு செய்துள்ளது. அவர்கள் இது தொடர்பாக ஒரு ஊடக அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர் என்று தொழில்துறை அமைச்சர் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.
தாமஸ் ஒலிக்கல் என்ற மலையாளி நடத்தும் நிறுவனத்தில் கண்ணூரில் ஒரு உற்பத்தி ஆலை உள்ளது. அதில் 1500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள். சிறந்த குழுப் பணியின் காரணமாக, நிறுவனம் சர்வதேச தரத்தில் ஆடைகளை உற்பத்தி செய்ய முடிகிறது, என்றார்.
ஒலிக்கால் இதுக்குறித்து கூறுகையில் தற்போதைய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் மற்றும் இஸ்ரேல் மற்றும் காசா -வில் அமைதி திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இஸ்ரேலிய காவல்துறையைத் தவிர, கேரளாவைச் சேர்ந்த நிறுவனம் பிலிப்பைன்ஸ் ராணுவம், கத்தார் விமானப்படை, கத்தார் போலீஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள், மத்திய கிழக்கில் உள்ள பல பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கும் சீருடைகளை வழங்குகிறது.
கேரள நிறுவனத்தின் இந்த முடிவால் வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் அமைதிக்கான முயற்சியாக இதைப் பார்ப்பதாக கேரள அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications