கேரளா: கேரளாவை சேர்ந்த ஒரு முதலீட்டு நிபுணர் தன்னுடைய வீட்டு பணிப்பெண்ணுக்கு டீமேட் கணக்கு துவங்கி அவரை ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்து அவருக்கு லாபம் ஈட்டி தந்துள்ளார். சுதீப் என்பவர் கேரளாவை சேர்ந்த முதலீட்டு நிபுணர், இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தன் வீட்டு பணிப்பெண்ணுக்காக ஸெரோதாவில் டீமேட் கணக்கு தொடங்கி அதன் மூலம் அவரை சிறிது சிறிதாக ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்ததாக பதிவு செய்துள்ளார்.
ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளில் அவரது பணத்தை முதலீடு செய்ய வைத்ததாகவும் ஒரு மாத காலத்திலேயே அவரது போர்ட்போலியோ 30 சதவீத வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்..

அதாவது அவருடைய 1 லட்சம் ரூபாய் முதலீடு தற்போது 1.28 லட்சம் ரூபாய் என உயர்ந்திருக்கிறது என சுதீப் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு பாராட்டும் விதமாகவும் எச்சரிக்கும் விதமாகவும் பல்வேறு பின்னூட்டங்கள் வந்துள்ளன. சுதிப் தன்னுடைய பதிவில் அந்தப் பணிப்பெண்ணின் முதலீட்டு போர்ட்போலியோ அடங்கிய ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் பங்குச் சந்தைகள் மற்றும் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும் அது தொடர்பான கற்றலை நாம் கொண்டுவரும்போது அவர்களும் இது லாபமிட்ட முடியும் என சுதீப் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சுதீப்பின் செயலை சிலர் பாராட்டியுள்ளனர். ஸ்மால் கேப் பங்குகளை பொறுத்தவரை அவை அதிக லாபம் தரக்கூடியதாக இருந்தாலும் அதிக அளவில் ஏற்றம் இறக்கம் கொண்ட பங்குகளாக இருக்கும், எனவே இதில் ஆபத்து என்பது அதிகம். எனவேதான் முதலீட்டு நிபுணர்கள் பொதுவாக முதலீடு என வரும்போது ஆரம்ப கட்டத்தில் லார்ஜ் கேப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுரை செய்கின்றனர். இப்படி குறைந்த வருமானம் கொண்ட ஒரு நபரை ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்ய செய்தது ஏன் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏனெனில் அவரது பணிப்பெண்ணின் ஆபத்து ஏற்புத்தன்மை என்பது மிக மிக குறைவாக இருக்கும். ஸ்மால் கேப் நிறுவன பங்கு இவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் திடீரென இந்த பங்கின் மதிப்பு சரிவடையும் வாய்ப்பு இருக்கிறது எனவே பாதுகாப்பான முதலீட்டு கருவிகளை அவர் ஏன் பரிந்துரை செய்யவில்லை என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள சுதீப் இந்த பணிப்பெண் ஏற்கனவே ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்திருப்பதாகவும் அவருடைய மாத வருமானம் 20,000 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை இருப்பதால் அவருக்கு இந்த முதலீட்டில் உள்ள ஆபத்துகள் குறித்து அனைத்தையும் தெரிவித்த பிறகு தான் ஸ்மால் கேப் பங்கில் முதலீடு செய்ய வைத்தேன் என கூறியுள்ளார்.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications