இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு கல்வி அறிவு என்பது குறைவு தான். குறிப்பாக பெண்களை படிக்க வைப்பது, வேலைக்கு அனுப்புவது இதெல்லாம் ஒரு குற்றமாக பார்க்கப்பட்ட காலகட்டம் அது.
இப்படி பல்வேறு சமூக ரீதியான சவால்களை கடந்து தங்களுக்கு என ஒரு துறையை தேர்வு செய்து சாதனை படைத்த பெண்களும் இருக்கிறார்கள். சவால்களால் துவண்டு போகும் பெண்கள் இவர்களின் கதைகளை கேட்டால் ஊக்கம் பெற்று எதிர்நீச்சல் போட தொடங்குவர். அப்படி ஒரு சாதனை பெண்மணி தான் அன்ன ராஜம் மல்ஹோத்ரா.

இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ்: சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ராஜம் . 1927-ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்த அன்னா ராஜம், கோழிக்கோட்டில் தன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக சென்னை வந்தார்.
பெண்கள் கல்லூரி பயில வருவதெல்லாம் அதிசயமாக பார்க்கப்பட்ட சமயம் அது. ஆனால் அதை ஒரு பொருட்டாக கொள்ளாமல், மெட்ராஸ் பல்கலைகழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு பயின்றார்.
மக்களுக்காக பணியாற்றவே விருப்பம்: ஐ.ஏ.எஸ் தேர்வின் நேர்முகத் தேர்வின்போது, பெண்கள் பணியாற்ற ஏதுவான துறைகளைத் தேர்வு செய்யுமாறு அதிகாரிகள் அன்னா ராஜத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால், மக்களுக்காக நேரடியாகக் களமிறங்கிப் பணியாற்றவே விருப்பம் என்று கூறியுள்ளனர். மேலும், மெட்ராஸ் கேடரிலேயே தனக்குப் பதவி ஒதுக்குமாறு அவர் கேட்டு வாங்கிக்கொண்டார்.
மெட்ராஸ் மாகாணத்தில் பொறுப்பு: அன்னா ராஜம் 1950ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மெட்ராஸ் மாகாணத்திலேயே பொறுப்பேற்றார். அப்போது ராஜாஜி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார். ராஜாஜி உள்ளிட்ட 7 முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.
பிரதமர் இந்திரா காந்தியுடன் பயணம்: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவருடன் 8 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒரு அதிகாரியாக அன்னா ராஜத்துக்குக் கிடைத்தது. கடந்த 1982ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி எம்.பியாக இருந்தபோது அவருடன் பணியாற்றிய அன்னா ராஜம், டெல்லியில் கடந்த 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநருடன் திருமணம்: அன்னா ராஜம் ஆர்.என் மல்கோத்ராவை திருமணம் செய்துகொண்டார். ஆர்.என்.மல்கோத்ரா கடந்த 1985-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்ம பூஷன் விருது: அன்னா ராஜமின் சேவைகளைப் பாராட்டி அவருக்குக் கடந்த 1989-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது. ஐ.ஏ.எஸ் பணியில் அவர் சேரும்போது, பெண்கள் திருமணம் செய்துகொண்டால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்' என்ற விதி அமலில் இருந்தது. பின்னர் அந்த விதி திருத்தப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு மும்பையில் அன்னா ராஜம் மல்ஹோத்ரா இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் அவர் பெண்களுக்கு என வகுத்துச் சென்ற பாதையில் பல பெண்கள் பயணித்து வருகின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications