திருவனந்தபுரம்: வீட்டில் சும்மா இருக்கிறோம் போர் அடிக்குது என தொடங்கப்பட்ட காளான் வளர்ப்பு தற்போது 90 லட்சம் வருமானம் தரும் தொழிலாக மாறி இருக்கிறது இந்த கேரள தம்பதிக்கு. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சிஜி. இவர் 2007 ஆம் ஆண்டு பொழுதுபோக்குக்காக தன்னுடைய வீட்டு பால்கனியில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். பின்னாளில் இது அவருக்கு மிகப்பெரிய அளவு வருமானம் தரும் தொழிலாக மாறி இருக்கிறது. தற்போது 57 வயதாகும் சிஜியும், 65 வயதாகும் அவரது கணவர் தங்கச்சானும் முழுவதுமாக காளான் வளர்ப்பில் ஈடுபட்டு ஆண்டுக்கு 90 லட்சம் ரூபாய் வருமானமாக ஈட்டுகின்றனர்.
இந்த இருவரின் குடும்பமுமே விவசாயத்தை பின்னணியாக கொண்டது. தன்னுடைய மனைவி காளான் வளர்ப்பில் ஈடுபடுவதை பார்த்து தங்கச்சானும் அவருக்கு உதவி செய்ய தொடங்கியுள்ளார். பின்னர் தன் வேலையை விட்டு விட்டு முழு நேர காளான் வளர்ப்பில் இறங்கினார். இப்படி 2007 ஆம் ஆண்டு இவர்கள் கூன் ஃபிரஷ் (Coon Fresh ) என்ற பெயரில் காளான் விற்பனை நிறுவனத்தை தொடங்கினர்.

முதல் கட்டமாக ஓராண்டு காலத்திற்கு இவர்கள் தங்கள் வீட்டிலேயே பல்வேறு வகையான காளான்களை வளர்த்தனர். அவை கேரளாவின் தட்பவெட்ப நிலையில் எப்படி வளர்கிறது, அதன் ஊட்டச்சத்து விகிதங்கள் எவ்வாறு இருக்கின்றன, என்பதையெல்லாம் ஆய்வு செய்தனர்.
இதற்காக பால்கனிலேயே ஓராண்டு காலம் பல வகையான காளான்களை வளர்த்தனர். இந்த ஓராண்டு காலம் அவர்களுக்கு நம்பிக்கையும் அனுபவமும் கிடைத்தது. இதனை அடுத்து அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 50,000 ரூபாய் முதலீட்டில் 600 காளான் படுக்கைகளை அமைத்து காளான் வளர்ப்பில் ஈடுபட தொடங்கினர். காளான் வளர்ப்பில் ஈடுபட்டாலும் மக்களிடையே காளானில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு குறைவானதாக இருப்பதை உணர்ந்தனர்.
முதல் கட்டமாக காளானை உண்ண வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தனர் .இதன் பின்னர் இவர்களது காளான் விற்பனையும் படிப்படியாக உயர்ந்தது. முதலில் காளான்களை மட்டுமே விற்பனை செய்து வந்த இவர்கள் பின்னாளில் காளான் மோமோ, காளான் கட்லெட் , காளான் சாண்ட்விச் உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்ய தொடங்கினர். கூடிய விரைவில் இவர்கள் கூன் வீட்டா என்ற பெயரில் ஒரு புதிய பொருளை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது லூலூ இன்டர்நேஷனல் ஷாப்பிங் மாலில் இவர்களது நிறுவன காளான்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காளான் வளர்ப்பு தொடர்பாக இவர்கள் பல்வேறு விவசாயிகளுக்கும் பயிற்சிகளையும் வழங்கி இருக்கின்றனர். தற்போது இவர்களது நிறுவனம் ஆண்டுக்கு 90 லட்சம் வருமானம் ஈட்டுகிறது. அண்மையில் இவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிங் சிறந்த காளான் வளர்ப்பு நிறுவனம் என்ற விருதையும் வென்றனர்.
Written by: Devika
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications