கேரளாவில் சுஜித் என்ற விவசாயி தான் இன்று இணைய உலகின் டிரெண்டிங் ஆக உள்ளார். இணையத்தில் பல வீடியோக்கள் வைரல் ஆனாலும் ஒருசில வீடியோக்கள் மட்டுமே மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும். அப்படிப்பட்ட வீடியோ தான் இது.
இந்த வீடியோவை variety farmer என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது, வீடியோவில் சுஜித் விவசாய நிலத்தில் இருந்து கீரை கட்டுகளை ஆட்டோவில் கொண்டு வருகிறார், ஆனால் அவர் தனியாக ஆடி A4 காரில் வந்து கடகடவென கட்டியிருந்த வேட்டியை காரில் கழட்டி போட்டுவிட்டு டிராயர் உடன் விற்பனையை துவங்குகிறார்.

சாலை ஓடத்தில் தார்பாய் விரித்து ஆட்டோவில் கொண்டு வந்த கீரை கட்டுகளை விற்க துவங்குகிறார். அடுத்த சில மணிநேரத்தில் மொத்த கீரை கட்டுகளும் விற்பனையான நிலையில் ஆட்டோவை அனுப்பிட்டு காரில் சர்ரென கிளம்புகிறார். இந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் வியப்பு அளிக்கும் விஷயம் என்னவென்றால் கீரை விற்க காரில் வந்தது தான்.
சுஜித் கன்டென்ட் கிரியேட்டராக இருப்பது மட்டும் அல்லாமல் ஆர்கானிக் விவசாயத்தை மாற்று முறையில் செய்து அதிகப்படியான உற்பத்தி மற்றும் வருமானத்தை பெற்று வருகிறார். சுஜித்-க்கு சொந்தமான சேனல் தான் இந்த variety farmer என்ற இன்ஸ்டாகிராம் பக்கம். இதில் தான் செய்யும் வீடியோ, போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் சுஜித்.
சுஜிஸ் இஸ்ரேல் மாடல் விவசாயம் செய்து வெற்றிப்பெற்ற காரணத்தால் இவர் தற்போது கேரளா முழுவதும் பிரபலமாகியுள்ளார். விவசாயம், கன்டென்ட் கிரியேஷன் ஆகியவற்றின் மூலம் வெற்றி பெற்ற அவர் சமீபத்தில் செக்ன்ட்ஹேண்ட் ஆடி A4 கார்-ஐ வாங்கியுள்ளார், இந்த காரில் வந்து விற்பனை செய்தது தான் டிரெண்டிங் வீடியோ-வாக மாறியுள்ளது. புதிய ஆடி A4 கார் 44 முதல் 52 லட்சம் மதிப்புடையது.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழிற்துறையிலும் பெரும் புரட்சியை கடந்த 10 வருடத்தில் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 50 வருடத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றங்களும், தொழில்நுட்ப பயன்பாட்டு காரணமாக அனைத்து துறைகளிலும் அதிகப்படியான லாபம் ஈட்டக்கூடியதாக மாற்ற உதவுகிறது. ஆனால் இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களால் தனிநபர் அதிக வருமானம் ஈட்டுவதிலும், பலன் பெறாத துறைகளில் ஒன்றாக இருப்பது விவசாயம். ஆனால் சமீபத்தில் விவசாய துறையிலும் மாற்றங்கள் நடந்து வருகிறது.
விவசாயம் என்றாலே கடினமாக உழைக்கும் விவசாயிகளும், வருவாயை உருவாக்கும் பிம்பம் சமீப காலமாக மெல்ல மெல்ல உடைந்து வருகிறது. கார்ப்பரேட் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும், கார்பரேட் நிறுவனத்தில் பணியாற்றுவதை விரும்பாமல் தொழில்முனைவோராக மாறும் பல இளைஞர்கள் தேர்வு செய்யும் துறையாக தற்போது விவசாயம், கால்நடை வளர்ப்பாக மாறியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications