இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் அதிகளவில் ரப்பர் உற்பத்தியாகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கேரள ரப்பர் உற்பத்தி பெரிய லாபத்தை அளிக்கவில்லை. ரப்பர் உற்பத்தி செலவு அதிகரித்ததோடு அதன் விலையும் குறைந்துவிட்டது.
காரணம், இந்தோனிஷியா, வியட்நாமிலிருந்து மலிவு விலையில் ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. கர்நாடகாவை ஒட்டியுள்ள கண்ணூர் மாவட்டத்தின் உலிக்கல் கிராமம் ஒரு காலத்தில் ரப்பர் உற்பத்தியில் முன்னிடத்தில் இருந்தது.

லட்சக்கணக்கான ரப்பர் விவசாயிகளில் பிஜு நாராயணனின் குடும்பமும் தங்கள் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியில் ரப்பரை விளைவித்தது. ரப்பர் உற்பத்தியில் லாபம் கிடைக்காததால் அவரது குடும்பம் சிரமத்துக்கு ஆளானது.
ஒரு கிலோ ரப்பர் உற்பத்தி செய்ய ரூ.160 ஆனது. ஆனால் அதன் விற்பனை விலை வெறும் ரூ.110 தான். ஒரு கூலி தொழிலாளி விவசாயியை விட அதிகம் சம்பாதித்தார், இதனால் ரப்பர் உற்பத்தி கட்டுபடியாகவில்லை.
இதனால் ரப்பர் உற்பத்தியை விட்டுவிட்டு பிஜு தனது நிலத்தில் ரம்பூட்டான், மங்குஸ்தான், மிளகு, ஆரெகா கொட்டை, முந்திரி, தேங்காய் போன்ற பல வகையான பழங்களையும் விளைவித்தார். மக்கள் என்னை மடையன் என்று அழைத்தார்கள். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் நிலத்தில் இருந்த ரப்பர் மரங்களை வெட்டி விட்டேன் என்றார் பிஜு.
இந்த முடிவு பல மாதங்களுக்கு பலரால் விமரிக்கப்பட்டாலும் நல்லதொரு விவசாயமாக மாறியது. எனது முடிவை விமரிசித்த குடும்பத்தார், அக்கம்பக்கத்தாருக்கு நான் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு உழைத்தேன். விவசாயத்தை விவசாய பிசினஸாக மாற்றினேன் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் பிஜு.
இப்போது பிஜு ரம்பூட்டான் விளைச்சல் மூலம் ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஒரு ஏக்கரில் சம்பாதிக்கிறார். பிஜு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். தக்ஷிண கனனடாவில் உள்ள கேவிஜி கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார். 18 வயதில் அவர் கல்லூரி முதலாண்டு படித்தார். அப்போது அவரது தந்தையை இழந்தார். அதைத் தொடர்ந்து விவசாயப் பொறுப்பு இவரிடத்தில் வந்தது.
எனது படிப்பையும் விவசாயத்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டி இருந்தது. அதுதான் எனக்கு இருந்த ஒரே வாய்ப்பு. குடும்பத்தில் மூத்த மகனான எனக்கு எனது தங்கை, தாயை கவனிக்கும் கடமை இருந்தது.
பட்டப்படிப்பு முடித்ததும் அவர் கார்ப்பொரேட் உலகில் நுழைந்து 10 ஆண்டுகள் வேலை பார்த்தார். பின்னர் அவர் வேலையை விட்டுவிட்டு விவசாயத்துக்கு திரும்பினார்.
ஒரேமாதிரியான பயிர்களை விளைவிக்காமல் அவர் மல்டி கிராப் விவசாயத்தை செய்து அதிக லாபத்தை பார்த்தார். தென்னை மரத்தை நட்டு அது 45 அடிக்கு உயர்ந்தது. மிளகு செடி 15 அடி உயரத்துக்கு வந்தது. வாழை 10 அடிக்கும் இஞ்சி, மரவள்ளிக் கிழங்கையும் நட்டேன். அவை 2 முதல் 5 அடிக்கு வளர்ந்தன.
இதனால் பயிர்களுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைத்தது. ஒரேநேரத்தில் நாலைந்து விதமான பயிர்களை விளைவிக்க முடிந்தது. இதில் ரம்பூட்டான் பழ சாகுபடி பிஜுவுக்கு அதிக லாபத்தை பெற்றுத் தந்தது. ஒரு ஏக்கருக்கு 100 செடிகளை அவர் நட்டார். வழக்கமாக 50 முதல் 60 செடிகள் நடும்போது அவர் 100 நட்டார். இதனால் விளைச்சல் அதிகரித்தது.
2010இல் ரம்பூட்டான் பழத்தை விளைவிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு செடியில் இருந்தும் 40 கிலோ பழங்களை அறுவடை செய்தார். 7 ஆண்டுகளில் அதே செடியில் இருந்து 80 கிலோ வரை கிடைத்தது. ஒரு கிலோ ரூ.250க்கு விற்றார். இதனால் ஒரு ஏக்கருக்கு அவருக்கு ரூ.15 லட்சம் வரை லாபம் கிடைத்தது.
எனது நிலத்தில் இருந்து கிடைத்த வருமானத்தில் வாழ்க்கையே திசை திரும்பிவிட்டது. வேலையை விட்டுவிட்டாலும் இப்போது விவசாயத்தால் நான் ராஜாவாக உணர்கிறேன் என்றார் பிஜு.
Story written by: Jayachandran
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications