Audi முதல் Range Rover வரை வரிசை கட்டி நின்ற ஆடம்பர கார்கள்:ஊழியர்களுக்கு பாஸ் தந்த சர்ப்பிரைஸ்!!

வேலை செஞ்சா இப்படி ஒரு முதலாளி கிட்ட வேலை செய்யனும் என ஏங்க வைக்கும் அளவுக்கு ஒரு முதலாளி தன்னுடைய ஊழியர்களுக்கு ஆடம்பர கார்களை பரிசாக தந்து மனதில் இடம்பிடித்துவிட்டார்.

வழக்கமாக நிறுவனங்கள் தங்களின் தொழிலில் லாபம் கிடைத்தால் அதில் கணிசமான ஒரு பகுதியை ஊழியர்களுக்கு பல்வேறு வழிகளில் பகிர்வார்கள். சில நிறுவனங்கள் போனஸ் தொகையாக வழங்கும், சில நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் சிறப்பு மிதி தொகுப்பாக வழங்கும். சில நிறுவனங்கள் பரிசு பொருட்களையும் வழங்குவது உண்டு. ஆனால் இங்கே ஒரு நிறுவனம் ஒரு படி மேலே சென்று தங்களுடைய ஊழியர்களுக்கு ரேஞ்சு ரோவர், ஆடி என ஆடம்பர கார்களை பரிசாக தந்திருக்கிறது.

Audi முதல் Range Rover வரை வரிசை கட்டி நின்ற ஆடம்பர கார்கள்:ஊழியர்களுக்கு பாஸ் தந்த சர்ப்பிரைஸ்!!

கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு ஆடம்பர கார்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சி தந்துள்ளது. HiLITE Group என்ற குழுமம் கோழிக்கோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மால் போன்ற வணிக ரீதியான கட்டிடங்களை கட்டிய பெருமை கொண்டு நிறுவனம் இது.

இந்த நிறுவனம் நிறுவப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. இதனை இந்நிறுவன ஊழியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது ஊழியர்களுக்கு ஆடம்பர கார்களை பரிசாக வழங்கி சர்ப்பிரைஸ் செய்துள்ளார் HiLITE Group நிறுவன தலைவர் சுலைமான். 30 ஆண்டுகாலம் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்த 47 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்துள்ளார்.

நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வேலை செய்ய கூடிய ஊழியர்களுக்கு இந்த கார்கள் பரிசு கிடைத்துள்ளது. ஆடி (Audi Q8) , ரேஞ்ச் ரோவர் (Range Rovers), டிஃபெண்டர் (Land Rover Defender ) போன்ற ஆடம்பர கார்களும் டாடா ஹேரியர் (Tata Harrier), கியா செல்டோஸ் (Kia Seltos), ஹுண்டாய் கிரெடா (Hyundai Creta), ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq ) மாடல் கார்களையும் பரிசாக தந்துள்ளது.

மொத்தம் 20 கோடி ரூபாய்க்கு கார்கள் வாங்கப்பட்டு 47 ஊழியர்களுக்கும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக நிறுவனம் வளர்ச்சி அடைவதற்கும் அதனை தக்க வைத்து கொள்வதற்கும், ஊழியர்களே காரணம் என நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

ஹைலைட் குழுமம் கடந்த 1996 ஆம் ஆண்டு கோழிக்கோட்டை தலைமை இடமாக கொண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பல்வேறு ரீடைல் மற்றும் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டகளை நடத்தி வருகிறது. குறிப்பாக கேரளாவின் புகழ்பெற்ற ஃபோகஸ் மாலை கட்டி அமைத்தது. இந்த நிறுவனம் மேலும் 10 மால்களை கேரளாவில் கட்டியமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. சுமார் 10,000 பேர் இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+