இந்தியா போன்ற ஒரு நாட்டில் வங்கி வேலை கிடைக்க வேண்டும் என லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஆனால் அப்படி தனக்கு கிடைத்த வங்கி வேலையை விட்டுவிட்டு சுய தொழில் செய்து மாதந்தோறும் 3.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார் ஒரு கேரள சேட்டன்.
கேரள மாநிலம் அலெப்பியை சேர்ந்த அஜய் கோபிநாத் கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய வங்கி வேலையை விட்டுவிட்டு மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தியில் கால் பதித்தார். இவர் தன்னுடைய வீட்டிலேயே மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் நுண் தாவரங்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

மைக்ரோகிரீன்ஸ் எனப்படும் இந்த தாவரங்கள் விதை போட்டு 7 நாட்களிலேயே அறுவடை செய்யப்படுகின்றன. இவை உடலில் கொழுப்பை குறைக்கும், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும் மற்றும் குடலுக்கு மிகவும் நன்மையானவை என சொல்லப்படுகிறது.
எனவே இது போன்ற தாவரங்களை வாங்கி உணவாக உட்கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அறிந்து கொண்டு தான் கோபிநாத் தன்னுடைய வங்கி வேலையை விட்டுவிட்டு மைக்ரோ கிரீன்ஸ் விவசாயத்தில் இறங்கினார்.
தற்போது 52 வயதாகும் இவர் 14 ஆண்டு காலம் வங்கியில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெங்களூருவில் ஒரு உணவகத்திற்கு சென்ற போது அவர் வாங்கிய சேலட்டில் நுண் தாவரங்கள் கொண்டு இருந்தது. அப்பொழுதுதான் மைக்ரோ க்ரீன்ஸ் எனப்படும் இந்த நுண் தாவரங்கள் குறித்து இவர் அறிந்து கொண்டார்.
இதனை அடுத்து இது எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என ஆய்வு செய்தபோதுதான் நாம் வீட்டிலிருந்தே இதனை எளிதாக உற்பத்தி செய்ய முடியும் என்பது அவருக்கு தெரிந்தது.
மைக்ரோ கிரீன்ஸ் வளர்ப்பு முறை குறித்து படித்து வந்த அவர் பிரிட்டனில் இந்த தொழிலில் ஈடுபடக்கூடிய சில விவசாயிகளின் தகவல் தொடர்பு கிடைத்து எப்படி இவற்றை வளர்ப்பது அதற்கு என்னென்ன தேவைப்படும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டார். பின்னர் தன்னுடைய வீட்டிலேயே ஒரு அறையை இந்த தொழிலுக்கான உற்பத்தி மையமாக மாற்றினார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பிறகு தான் இவருக்கு இந்த நுண்தாவரங்கள் வளர்ச்சி குறித்து முழுமையான புரிதல் கிடைத்ததாம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விதைகளை வாங்கி இவர் தன்னுடைய வீட்டில் இருக்கும் அறையிலேயே அவற்றை வளர்த்து வருகிறார். ஒரு ட்ரேயிலேயே இவருக்கு 400 கிராம் தாவரங்கள் கிடைத்தனவாம். முதலில் இவற்றை தன்னுடைய நண்பர்களுக்கு வழங்கியுள்ளார்.
இவருடைய நண்பர் ஒருவர் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் பணியாற்றுபவர் அவர் அங்கிருக்கும் சமையல் கலைஞரிடம் இதனை தெரிவிக்க அவர்கள் தங்களுடைய உணவில் இவற்றை பயன்படுத்த தொடங்கினார்கள். இவ்வாறு அடுத்தடுத்து விற்பனையில் வளர்ச்சி பெற்றார். இதனை அடுத்து கிரோ க்ரீன் ஸ்டோர் என்ற பெயரில் ஒரு கடையை இவர் தொடங்கி விட்டார்.
முதலில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருமானமாக இவருக்கு கிடைத்ததாம் பின்னர் படிப்படியாக இவருடைய மாத வருமானம் 3.5 லட்சம் என உயர்ந்திருக்கிறது. தற்போது ஐந்து பேரை இவர் பணிக்கு அமர்த்தி உள்ளார். இந்த மைக்ரோ கிரீன்ஸில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது என்பதால் கீரையை விட இவை பல மடங்கு சக்தி கொண்டவை என்றும் புற்றுநோய், அல்சைமர் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு மக்கள் இவற்றை அதிக உட்கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications