இந்தியாவில் போக்குவரத்தை மேம்படுத்துவதன், எளிமையாக்குவதன் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ச்சி அடையும் என அதிகப்படியான அளவில் நம்பப்படும் நிலையில் பல திட்டங்கள் இந்திய அளவிலும், மாநில அளவிலும் செயல்படுத்தப்பட்டு வருதிறது.
இதன் படி கேரளாவில் முதல் முயற்சியாக வாட்டர் மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. இதோடு கேரளாவுக்கான முதல் வந்தே பாரத் ரயில் ஏப்ரல் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவ்விரண்டும் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 24 மற்றும் 25, 2023 தேதிகளில் செல்ல உள்ளார். இந்த பயணத்தில் கேரளவில் இரு முக்கிய திட்டத்தையும் திறந்து வைக்கிறார்.
கேரள மாநில அரசின் கனவு திட்டமான கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தை சுமார் 1,136.83 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு உள்ளது. உலக தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கு கேரள அரசும், ஜெர்மனி நாட்டின் முதலீட்டு ஏஜென்சியான KFW இணைந்து சுமார் 1136.83 கோடி ரூபாய் முதலீடு செய்து 78 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகளையும், 38 முணையங்களையும் அமைத்துள்ளது. கேரள அரசின் இந்த கனவு திட்டத்தின் மூலம் கொச்சியில் 10 தீவுகள் இணைக்கப்பட உள்ளது.

பிரதமர் மோடி கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தை திறப்பது துவக்கி வைப்பது மட்டும் அல்லாமல் ஏப்ரல் 25 அன்று, திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களை கடந்து செல்ல உள்ளது. வந்தே பாரத் ரயில், கொச்சி வாட்டர் மெட்ரோ மட்டுமின்றி சுமார் 3200 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களை துவக்கி வைப்பது மட்டும் அல்லாமல் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். டிஜிட்டல் சயின்ஸ் பார்க் கல்வியாளர்களுடன் இணைந்து தொழில் மற்றும் வணிக பிரிவுகளால் டிஜிட்டல் ப்ராடெக்ட்ஸ் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆராய்ச்சி தளமாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications