பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது குறித்த செய்திகள் இந்நகர மக்களை மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள், உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒருபக்கம் பெங்களூரில் இருக்கும் 15 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்க வேண்டும் அப்போது தான் இந்த தண்ணீர் பிரச்சனை தீரும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் இருக்கும் டெக் நிறுவனங்கள் பல்வேறு குழப்பத்தில் இருக்கும் வேளையில், இந்நகரில் இருக்கும் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்க கேரளா முயற்சி செய்து வருவது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.
பெங்களூரில் இருக்கும் டெக் நிறுவனங்களை அணுகி, நிறுவனம் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டாலோ, அல்லது இடமாற்றம் செய்யத் திட்டமிட்டாலோ கேரளாவுக்கு வர அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
"பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை குறித்த செய்திகளைப் படித்த பிறகு, ஐடி நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும், ஏராளமான தண்ணீர் ஆதாரத்தையும் வழங்க முடியும் என்று அவர்களுக்குக் கடிதம் எழுதினோம். எங்கள் மாநிலத்தில் 44 பெரிய மற்றும் சிறிய ஆறுகள் உள்ளன, எனவே தண்ணீர் பிரச்சனை எதுவுமில்லை," என்று கேரள தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பி. ராஜீவ் செவ்வாய்க்கிழமை டைம்ஸ் பத்திரிக்கைக்கு தெரிவித்தார்.
பெங்களூரில் நிலவும் தண்ணீர் பிரச்சனையைச் சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், கேரள அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரெஸ்டீஜ் குழுமம் கொச்சியில் 8.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு தொழில்நுட்ப பூங்காவைக் கட்டியுள்ளது.
பிரிகேட் குழுமம் திருவனந்தபுரத்தில் இதே போன்ற பூங்காவைக் கட்டி வருகிறது. கொச்சியில் உள்ள இன்ஃபோ பார்க்கில் சகல வசதிகளும் கொண்ட சொந்த அலுவலக இடமும், பிரிகேட், கார்னிவல், லுலு குழுமம் மற்றும் ஆசிய சைபர் பார்க் ஆகிய தனியார் டெவலப்பர்களால் கட்டப்பட்ட வசதிகளும் உள்ளன.
மேலும் மாநிலத்தில் நல்ல சாலை, ரயில் மற்றும் துறைமுக இணைப்பு வசதிகளுடன் நான்கு சர்வதேச விமான நிலையங்களும் உள்ளன என்று அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார்.
சிலிக்கான் வேலி மாதிரியான தொழில்நுட்ப மையமாக எங்கள் மாநிலத்தை முழுவதுமாக வளர்க்க விரும்புகிறோம். தொழில்நுட்ப பட்டதாரிகளின் பரந்த திறன் பங்களிப்பு உட்பட, தொழில்நுட்ப துறைக்குத் தேவையான பல சிறப்பம்சங்கள் உள்ளன என்று ராஜீவ் கூறினார்.
கேரள மாநிலத்தில் இன்ஃபோபார்க் (கொச்சி), டெக்னோபார்க் (திருவனந்தபுரம்) மற்றும் சைபர்பார்க் (கோழிக்கோடு) ஆகிய மூன்று முக்கிய ஐடி பார்க்குகள் உள்ள நிலையில், புதிய முதலீடுகளை அதிகரிக்கப் பல இடங்களில் அரசு சிறிய தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கும் என்று அமைச்சர் ராஜீவ் கூறினார்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications