கேரள அரசு 30 நாளில் 11 முறை உலகின் 2வது மிகப்பெரிய குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனமான KITEX-ஐ சோதனை செய்த காரணத்தால், தனது தொழிற்சாலை வர்த்தகம் அனைத்தையும் கேரளாவில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் இந்நிறுவனத்தின் தலைவரான சாபு எம் ஜேகப்.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே தெலுங்கானா மாநிலத்தின் தொழிற்துறை அமைச்சரும், அம்மாநில முதல்வரின் மகனுமான கே.டி.ராமா ராவ் KITEX சாபு எம் ஜேகப்-க்கு தனி விமானம் அனுப்பித் தெலுங்கானா-விற்கு அழைத்து வர்த்தக்கை முடித்தார்.
KITEX நிறுவனம்
KITEX தலைவரான சாபு எம் ஜேகப் முதலில் தெலுங்கானா மாநிலத்தில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பதாக அறிவித்தார். இதன் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரூ.2,400 கோடி முதலீடு
ஆனால் தற்போது சாபு எம் ஜேகப் தெலுங்கானாவில் சுமார் 2,400 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்த முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பையும் KITEX நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கானா அரசு
இந்த முதலீட்டுக்கு ஏதுவாகத் தெலுங்கான அரசு KITEX நிறுவனத்திற்கு நிலம், தண்ணீர், மின்சாரம் ஆகிய அனைத்தையும் குறைந்த விலையில் அளிக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது எனவும் சாப தெரிவித்துள்ளார்.
கே.டி.ராமா ராவ்
சாபு எம் ஜேகப் ஏற்கனவே அறிவித்த அளவை விடவும் 2 மடங்கு அதிகமாக முதலீடு செய்துள்ளார். தெலுங்கானாவில் தான் செய்யும் முதலீட்டுக்கு முழு முக்கியக் காரணம் ஒருவர் மட்டுமே தொழிற்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் எனத் தெரிவித்துள்ளார்.
KITEX - கேரள அரசு
ஜூலை மாதம் KITEX தலைவரான கேரள அரசு உடனான பிரச்சனையில் சாபு எம் ஜேகப், அம்மாநிலத்தில் செய்துள்ள 3,500 கோடி ரூபாய் முதலீட்டையும் திரும்பப் பெற உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே தமிழ்நாடு உட்படப் பிற மாநிலங்களை விடவும் வேகமாகக் கே.டி.ராமா ராவ், சாபு எம் ஜேகப் தொடர்பு கொண்டு வர்த்தகத்தை முடித்துள்ளார்.
22,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தற்போது சாபு எம் ஜேகப் அறிவித்துள்ள 2,400 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் தெலுங்கானாவில் சுமார் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இப்புதிய முதலீட்டுக்கான ஒப்பந்தம் தெலுங்கானா அரசு மற்றும் KITEX நிறுவனத்திற்கு மத்தியில் கையெழுத்தான நிலையில், KITEX நிறுவனத்தின் நிர்வாகக் குழுவும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு இழப்பு
தமிழ்நாட்டில் மிகப்பெரிய டெக்ஸ்டைல் பூங்கா இருக்கும் நிலையில் KITEX நிறுவனம் போன்றவற்றை இழந்துள்ளது பெரும் இழப்பு. தமிழ்நாட்டில் இந்த முதலீடும், தொழிற்சாலையும் உருவாக்கப்பட்டு இருந்தால் டெக்ஸ்டைல் துறையில் தமிழ்நாடு அடுத்த இடத்தைத் தொட்டு இருக்கும்.
தெலுங்கானா அடுத்த அதிரடி
KITEX நிறுவனத்தைக் கைப்பற்றிய தெலுங்கானா அரசு சுமார் 6 கேரளா நிறுவனங்களிடம், தங்கள் மாநிலத்தில் தொழிற்சாலை மற்றும் வர்த்தகத்தைத் துவங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது அதிகரிக்கும் எனப் பலர் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications