கனமழையால் அடிக்கடிக்கடி பெங்களூக் சாலைகளும், டெக் பார்க்குகள், குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கும் சம்பவம் அடிக்கடி நடக்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், தற்போது கேரளாவில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது.
கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் கனமழை பெய்ததால், அம்மாநிலத்தின் முதல் மற்றும் பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவான டெக்னோபார்க் மழைநீரில் மிதந்துக்கொண்டு இருக்கிறது. கேரளாவின் தென் மாவட்டமான திருவனந்தபுரத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

ஐடி பார்க் ஆன டெக்னோபார்க் மழைநீரில் மூழ்கிய வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, இதோடு பல பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பெய்த மழை பல இடங்களை மழை வெள்ளத்தால் கடுமையாக பாதித்தது, இதில் Technopark ஐடி பார்க்-ம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் திருவனந்தபுரத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து தண்ணீர் வடியாததால், ரயில்களின் நேரம் மாற்றம் மற்றும் தாமதம் ஏற்பட்டது.
திங்கள்கிழமை மழை பொழிவு கணிசமாக குறைந்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் திருவனந்தபுரம் புறநகர் பகுதியான கஜகூடத்தில் உள்ள டெக்னோபார்க் காலனியில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை வெள்ளத்தால் மூழ்கியிருந்த விடுதியில் இருந்து பல பெண் மாணவிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு படகுகளில் மீட்கப்பட்டதாக கேரள செய்தி சேனல் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு இடங்களில் ஆரஞ்சு அலர்ட் மற்றும் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications