வாழ்க்கையில யாருக்கு எப்போ ஜாக்பாட் கிடைக்குமே சொல்ல முடியாது. அப்படி புதுச்சேரிய சேர்ந்த நபருக்கு கேரளா லாட்டரியில ரூ.20 கோடி பரிசு கிடைச்சிருக்கு.
தமிழ்நாட்டில் லாட்டரி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் , அந்த மாநில அரசே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி, கோடைக்கால பம்பர் லாட்டரி, விஷூ லாட்டரி, பருவகால லாட்டரி பம்பர் லாட்டரி, திருவோணம் பம்பர் லாட்டரி மற்றும் பூஜா பம்பர் லாட்டரி ஆகியவை புகழ்பெற்றவை. இதில் இரண்டாவது அதிகபட்ச பரிசு தொகை கொண்டது கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி.
கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர்: கேரள அரசின் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் முதல் பரிசானது ரூ.20 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு, குறிப்பிட்ட எண்ணை கொண்ட லாட்டரியை வாங்கியவருக்கு கிடைக்கும். இரண்டாவது பரிசு 10 பேருக்கு தலா 1 கோடி ரூபாய் என 20 பேருக்கு பிரித்து தரப்படும்.
புதுச்சேரியை சேர்ந்தவருக்கு ஜாக்பாட்: புதுச்சேரியை சேர்ந்த ஒரு நபர் (பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை), ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு சென்றுள்ளார்.
தனது சபரிமலை யாத்திரையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் சென்றவர், அங்கே பத்மநாப சுவாமி கோயில் அருகே லாட்டரி கடையில் இருந்து கிறிஸ்துமஸ் – புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியுள்ளார். பின்னர் அவர் புதுச்சேரிக்கு திரும்பிவிட்டார்.
ரூ.20 கோடி பரிசுத்தொகை: கேரள அரசு, முதல் பரிசு பெறும் லாட்டரி எண்ணை அறிவித்தது. இதில் எதிர்பாரா விதமாக புதுச்சேரி ஐயப்ப பக்தருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. இதனை அடுத்து லாட்டரி சீட்டு மற்றும் ஆவணங்களுடன் கேரளா சென்ற அவர், பரிசுத்தொகை பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டார்.
அப்போது ஊடகங்களை சேர்ந்தவர்கள் அவரை காண குவிந்திருந்த நிலையில் அவர் பதற்றமடைந்து தன்னுடைய விவரங்களை வெளியிட வேண்டாம் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
ரூ.20 கோடியும் பரிசாக கிடைக்குமா?: கிறிஸ்துமஸ் – புத்தாண்டு பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.20 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தொகை முழுவதுமாக வெற்றியாளருக்கு கிடைக்காது. அவருக்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஏஜெண்டுக்கு ரூ.2 கோடி மற்றும் வரி உள்ளிட்டவற்றை நீக்கினால் ரூ.12 கோடி மட்டுமே வெற்றியாளருக்கு கிடைக்கும். இந்த எதிர்பாராத பரிசால் அந்த புதுச்சேரி பக்தர் திக்குமுக்காடி இருப்பார்.


Click it and Unblock the Notifications