துபாய்: கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிடித்துக் கொண்டு கொட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப கேரளாவை சேர்ந்த ஒரு நபருக்கு இரண்டாவது முறையாக துபாயில் ஒரு மில்லியன் டாலர்கள் மதிப்பிலான லாட்டரி கிடைத்திருக்கிறது.
பால் ஜோஸ் மவேலி என்பவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். 60 வயதான இவர் 1999ஆம் ஆண்டு முதலே துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு துபாயில் லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ஒருமுறை லாட்டரி வென்ற இவர் தற்போது இரண்டாவது முறையாகவும் லாட்டரி வென்றிருக்கிறார். இரண்டாவது முறையாக இவருக்கு துபாயில் 1 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட லாட்டரி விழுந்திருக்கிறது.

துபாய் டூட்டி ஃப்ரீ நிறுவனம் தங்களுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் இந்த மாதத்திற்கான லாட்டரி வெற்றியாளர் யார் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கேரள மாநிலத்தில் சேர்ந்த பால் ஜோஸ் மவேலி இந்த முறை லாட்டரி வென்று இருக்கிறார் என்றும் அவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பால் ஜோஸ் 1999 ஆம் ஆண்டிலிருந்து துபாய் டூட்டி ஃப்ரீ லாட்டரிகளை வாங்கி வருகிறாராம். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து இந்த லாட்டரிகளை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர் . இந்த முறை இவர் தன்னுடைய 17 நண்பர்களோடு இணைந்து துபாய் டூட்டி ஃப்ரீ லாட்டரி வாங்கி இருக்கிறார் .அவருக்கு மே 19ஆம் தேதி 3532 என்ற எண் கொண்ட லாட்டரி கிடைத்தது. இந்த நிலையில் மே மாதத்திற்கான வெற்றியாளராக பால் ஜோஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இவர் ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு இதேபோல துபாய் பியூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் என்ற லாட்டரியை வென்றார் .அப்போது 9 நண்பர்களோடு இணைந்து அவர் லாட்டரி சீட்டை வாங்கி இருந்ததால் தனக்கு கிடைத்த ரொக்கத்தை 9 நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டார். இந்த முறையும் தனக்கு கிடைக்கும் பணத்தை நண்பர்களுடன் பகிர்வதாக கூறி இருக்கிறார். 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 8.5 கோடி ரூபாய் ஆகும்.
துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி செய்து வரும் பால் ஜோஸ், இரண்டாவது முறையாக தனக்கு லாட்டரி விழுந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கலீஜ் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். துபாய் டூட்டி ஃப்ரீ என்ற லாட்டரி திட்டம் 1999 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லாட்டரியை வாங்குபவர்களில் ஒருவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஜாக்பாட்டை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த லாட்டரி கட்டணம் 22,000 ரூபாய் ஆகும்.
இதனை துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டூட்டி ஃப்ரீ கடைகள் அல்லது ஆன்லைனில் துபாய் டூட்டி ஃப்ரீ இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம். எந்த நாட்டை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். 1999 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை துபாய் டூட்டி ஃப்ரீ லாட்டரியை 251 இந்தியர்கள் வெற்றி பெற்று ஜாக்பாட்டை தட்டிச் சென்றுள்ளனர்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications