காளான் வளர்ப்பில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சேச்சி..!

காளான் சுத்தமான சைவ உணவுப் பொருள் என்றாலும் சுவையில் அது உண்மையிலேயே ஆட்டிறைச்சி போல இருக்கும். நன்றாக மசாலா சேர்த்து குழம்பு செய்தாலோ அல்லது மிளகு போட்டு வறுவலாக செய்தாலோ அவ்வளவு சுவையாக இருக்கும்.

அசைவப் பிரியர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக சைவ உணவை சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் நிச்சயமாக காளான் அவர்களது அசைவ உணவு சாப்பிடும் ஆசையை நிறைவேற்றி வைக்கும்.

காளான் வளர்ப்பில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சேச்சி..!

காளான்களில் பட்டன் காளான், ஆய்ஸ்டர் காளான், பிரவுன் குடை காளான் என பலவகைகள் உள்ளன. எல்லாமே ருசியாக இருக்கும்
மக்களிடையே இப்போது காளான் உணவு மிகவும் பிரபலமாகி விட்டது. இதனால் காளான் வளர்ப்புத் தொழிலும் நல்ல லாபகரமானதாகி விட்டது.

கேரளாவை சேர்ந்த ஜித்து தாமஸ்ஸுக்கு 19 வயது இருக்கும்போதே காளான் வளர்ப்பில் மிகுந்த நாட்டம் இருந்தது. ஜித்து தாமஸ்ஸின் தாயார் லீனா தாமஸ் உதவியுடன் காளான் வளர்ப்பு தொழிலைத் தொடங்க முடிவு செய்தார்.

காளான் வளர்ப்பதற்கு தனித்துவமான தட்பவெப்ப நிலை தேவை. 30 டிகிரிக்குக் குறைவான உஷ்ணம் இருந்தால்தான் நன்றாக காளான் வளரும். காளானை ஒரு விசாலமான அறையில் கூட வளர்க்கலாம். அங்கு ஒரு கூலிங் சிஸ்டம் போட்டு குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தினால் காளான் வளர்ப்பு எளிதாகிவிடும்.

அறைகளில் அடுக்கடுக்காக ஷெல்புகளை அமைத்து அதில் காளான் வளர்க்கலாம். ஆனால் அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரேயொரு டிகிரி அதிகரித்தால்கூட காளான் அழுகிவிடும் அபாயம் உள்ளது. எனவே கூலிங் சிஸ்டம் பக்காவாக இருக்க வேண்டும்.
ஜித்து தாமஸ்ஸும் அவரது தாயார் லீனா தாமஸ்ஸும் தங்களது வீட்டில் 5000 சதுர அடியில் ஒரு ஷெட்டை அமைத்து அங்கு காளான்களை வளர்க்கின்றனர்.

தினமும் 100 கிலோ வரை காளான்களை உற்பத்தி செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு தினமும் 40 ஆயிரம் ரூபாய் சர்வசாதாரணமாக லாபம் கிடைக்கிறது.

வளர்ந்த காளான்களை மொத்த வியாபாரிகள் அவர்களது வீட்டுக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். அத்துடன் அவர்களும் காளான்களை 200 கிராம் பாக்கெட்டில் அடைத்து வீட்டிலேயே விற்கின்றனர்.

காளான் வளர்ப்பு மட்டுமல்லாமல் காளான் வளர்ப்புத் தொழில் பற்றிய பயிற்சியையும் ஜித்துவும் லீனாவும் ஆர்வமுள்ளவர்களுக்கு அளித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் இதுவரை அவர்களிடம் வந்து கற்றுக் கொள்கின்றனர்.

வீட்டில் இருந்தபடியே சைடு பிசினஸாக அதேநேரத்தில் நல்ல லாபத்தை தரும் தொழிலாக இருப்பதால் இளம் வயதினர் இப்போது காளான் வளர்ப்பில் அதிக ஆர்வத்தைக் காட்டுகின்றனர்.

Story written by: I.jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+