மத்திய அமைச்சரவை கேரள மாநிலத்தின் பெயரை அதன் மலையாள வடிவமான "கேரளம்" என மாற்றும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட முக்கிய அரசியல் முடிவு என்பதால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கேரள சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 2024இல் இதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த மாற்றம் பெரும்பாலும் மலையாள மொழி மற்றும் பாரம்பரியத்தை குறிக்கும் அளவிலானது, நிர்வாகமோ அல்லது ஆளுமை முறை, பழைய ஆவணங்கள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் ஏற்படாது.

மேலும் கேரளம் பெயர் மாற்றத்திற்கு மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தாலும், இந்த ஒப்புதல் குடியரசு தலைவர் முன்னிலையில் வைக்கப்பட்டும். இந்த மசோதாவை ஆய்வு செய்து குடியரசு தலைவர் மாநில அரசிடம் கருத்துக்களை பெற கேரள சட்டமன்றத்தில் முன்வைக்கப்படும். கேரள சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்களுக்கு பின்பு மத்திய அரசு பெயர் மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
அரசியல் கட்சிகளின் ஒற்றுமை
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) அரசு இந்த பெயர் மாற்றத்திற்கான முன்மொழிவை முன்வைத்தது. கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் "கேரளம்" என்ற பெயர் மாநிலத்தின் வரலாற்று மற்றும் மொழியியல் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக வலியுறுத்தினார். "கேரளா" என்ற பெயர் காலனிய ஆட்சியில் நிர்வாக வசதிக்காக உருவானது என்றும் அவர் விளக்கினார்.
இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பாஜகவும் ஆதரவு தெரிவித்தது. ஜனவரி 24 அன்று கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முதல்வருக்கு கடிதம் எழுதி ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் விஜயனுக்கு நன்றி தெரிவித்தார். இந்த இரு கட்சிகளின் ஆதரவு அரசியல் போட்டியைத் தாண்டி மாநில அடையாள விவகாரமாக மாறியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்
கேரளத்தில் 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தல் மே மாதத்திற்கு முன் நடைபெற வேண்டும். ஆனால் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் பெயர் மாற்ற விவகாரம் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
பொதுவாக அரசியல் கட்சிகள் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், "கேரளம்" என்ற பெயர் மாற்றத்துக்கு மாநிலத்தில் கட்சிகளைத் தாண்டி ஆதரவு கிடைத்துள்ளது. இது மாநில அரசியலில் புதிய ஒற்றுமையை காட்டுகிறது.
தமிழ்நாட்டில் மொழி அடையாளம் மிக முக்கியமானது. தமிழகத்தில் "தமிழ்நாடு" என்ற பெயரே மாநிலத்தின் பாரம்பரிய அடையாளத்தை காட்டும் ஒரு விஷயம். கேரளாவின் "கேரளம்" என்ற பெயர் மாற்றம் தமிழக மக்களுக்கு மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. தமிழகத்தில் உள்ள மலையாள சமூகத்தினர் இந்த மாற்றத்தை வரவேற்கின்றனர்.
மொத்தத்தில், "கேரளம்" என்ற பெயர் மாற்றம் குறியீட்டு ரீதியானது என்றாலும், மாநில அடையாளத்தை வலுப்படுத்தும் முக்கிய முடிவாகும். தேர்தலுக்கு முன் இந்த ஒப்புதல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. கேரள மக்களுக்கு இது பெருமை தரும் முடிவாக அமையும்.


Click it and Unblock the Notifications