அமெரிக்காவில் கிரிப்டோ மோசடி செய்து இந்தியாவில் சுற்றுலா.. குற்றவாளி பிடிபட்டது எப்படி?

உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி அடிப்படையிலான மோசடிகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் கிரிப்டோ கரன்சியில் 8 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்து அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த ஒரு நபர் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான லித்வேனியாவை சேர்ந்தவர் அலெக்சாஜ். இவர் காரன்டெக்ஸ் என்ற பெயரில் கிரிப்டோ கரன்சி நாணயங்களை வாங்கி விற்கக்கூடிய ஒரு பரிமாற்ற தளத்தை நடத்தி வந்தார். இந்த தளத்தின் வாயிலாக கடந்த ஆறு ஆண்டுகளில் இவர் எட்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரிப்டோ கரன்சிகளை பரிமாற்றம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் கிரிப்டோ மோசடி செய்து இந்தியாவில் சுற்றுலா.. குற்றவாளி பிடிபட்டது எப்படி?

இவை அனைத்துமே பயங்கரவாத குழுக்களுக்கு நிதி அளிக்கவும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. அது தவிர ஹேக்கிங் மற்றும் ஆன்லைன் மிரட்டல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கும் இந்த கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்தளம் உதவி இருப்பது அமெரிக்க காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அலெக்சாஜ் உடன் இணைந்து ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற நபரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார் .

இதனிடையே அமெரிக்க காவல்துறையினர் இவ்விருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது . இது தொடர்பாக இன்டர் போல் காவல்துறையினரும் இவ்விருவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அளித்தனர். இதனை அடுத்து அவர் இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் அமெரிக்க காவல்துறையினர் இந்த தகவலை மத்திய அரசிடம் தெரிவித்ததை எடுத்து மத்திய அரசு கேரள மாநில காவல் துறையினருக்கு இந்த விவரத்தை பகிர்ந்தது.

பின்னர் அமெரிக்க காவல்துறை அவரை கைது செய்வதற்கான வாரண்ட்டை வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. இதனை தொடர்ந்து கேரள மாநிலம் வார்கலாவில் சுற்றுலாவுக்காக வந்திருந்த இவரை கேரள மாநில காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியில் இருக்கும் பாட்டியாலா நீதிமன்ற நீதிபதியிடமிருந்து இந்த நபரை கைது செய்யுமாறு தங்களுக்கு உத்தரவு கிடைத்ததாக தெரிவித்திருக்கும் வார்க்கலாவின் டிஎஸ்பி கோபகுமார், கேரளாவில் இந்த நபர் எங்கே இருக்கிறார் என்பதை நாங்கள் கண்டுபிடித்து கஸ்டடியில் எடுத்தோம் என கூறியுள்ளார்.

இந்த நபருக்கு எதிராக இன்டர்போல் துறையினரிடமிருந்து ரெட் கார்னர் நோட்டீசும் வழங்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்ட அவர் இரண்டு நாட்களுக்கு இவரை கேரளாவில் வைத்திருந்த பின்னர் ரயில் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்வோம் என கூறினார். இதனை அடுத்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, டெல்லியில் இருந்து இவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். அலெக்சாஜ் போலவே அவரது நண்பர் அலெக்சாண்டரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+