டெல்லி: தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகமான NSSO தனது HCE அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2011 - 12 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமத்துவமின்மை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நுகர்வு செலவினங்களின் போக்கு குறித்து கடைசியாக 2011-12ஆம் ஆண்டில் NSSO ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் நுகர்வு செலவினங்களின் போக்குகள் குறித்த விரிவான தகவல்களை இந்த HCE அறிக்கை வெளிக்காட்டுகிறது.

கடந்த 2017 - 18 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது ஆனால் அது முன்கூட்டியே ஊடகங்களில் வெளியானதால் அரசு வெளியிடவில்லை. பின்னர் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
2022-23ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தி 10 ஆண்டு கால அளவில் ஒப்பீடு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் முதல் 5% சதவீத குடும்பங்களுக்கான சராசரி மாதாந்திர தனிநபர் செலவு புள்ளி விவரங்கள் உண்மையில் மற்ற மதிப்பீடுகள் அல்லது உயர் வருமானம் கொண்ட குடும்பங்களின் செலவு வடிவங்கள் பற்றிய ஆதாரங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது குறைவாகவே இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த வகையில் கிராமப்புறங்களில் மிகவும் பணக்கார மாநிலமாக கேரளா இருக்கிறது. ஏனெனில் இங்கு மாதத்திற்கு தனிநபர் நுகர்வு செலவினம் என்பது 5,924 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
தெலுங்கானா நகர்ப்புறங்களில் மிகப்பெரிய மிகப் பணக்கார மாநிலமாக இருக்கிறது. இங்கே ஒரு நபருக்கு மாதத்திற்கு 8,158 ரூபாய் நுகர்வு செலவினம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு தெலுங்கானா மாநிலத்தின் நகரமயமாக்கல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை காரணம் என சொல்லப்படுகிறது.
NSSO வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலத்தில் இருக்கும் நுகர்வு செலவின போக்குகள் குறித்த ஒரு விரிவான பார்வையை வழங்குகிறது.
குறிப்பாக இந்த ஆய்வறிக்கை இந்தியாவின் பொருளாதார நல்வாழ்வு மற்றும் நுகர்வு முறைகளில் உள்ள பிராந்திய வேறுபாடுகள் குறித்த ஒரு பார்வையை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நுகர்வு செலவில் முதல் 10% குடும்பங்களின் பங்கு குறைந்து, கீழ்த்தட்டில் உள்ள 50% குடும்பங்களின் பங்கு அதிகரித்திருப்பது வெவ்வேறு வருமான குழுக்களுக்கு இடையிலான நுகர்வு இடைவெளி குறைந்திருப்பதை காட்டுகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருந்தாலும் நகர்ப்புறங்களை ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் சமத்துவமின்மை குறைந்து விட்டது என்பது பொருளாதார வளர்ச்சி சுட்டிக்காட்டுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications