கொரோனாவின் காரணமாக முடங்கி போயுள்ள தொழில் துறைகள், சேவை நிறுவனங்கள் என பலவும் லாக்டவுனுக்கு பிறகு சற்று துளிர் விடத் தொடங்கியுள்ளன.
அதிலும் லாக்டவுனால் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்ய, பல மாநிலங்கள் அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு கேரளாவில், 20க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் வந்துள்ளதாக அரசு தரவுகள் கூறுகின்றன.
ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கம்
இது குறித்து வெளியான தரவில் ஏற்கனவே கேரளாவில் நிறுவப்பட்ட 5 ஐடி நிறுவனங்கள், விரிவாக்கம் செய்ய கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க உள்ளதாகவும் கேரளா அரசு தெரிவித்துள்ளது. தற்போது டெக்னோ பார்க்கில் உள்ள வின்விஷ் நிறுவனம், ஒரு ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் தனது சொந்த வளாகத்தினை உருவாக்க முடிவு செய்துள்ளது.
2 லட்சம் சதுர அடியில் கட்டமைப்பு
இது தவிர இன்னும் பல நிறுவனங்கள் கேரளாவுக்கு வருவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு 100 கோடி செலவில் டெக்னோசிட்டியில் 2 லட்சம் சதுர அடியில் தேவையான வசதிகளை கேரளா அரசு செய்து வருகின்றது. இந்த ஆண்டு டிசம்பரில் இந்த வேலை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டில் இருந்து பணி
பூர்த்தி செய்யப்பட்ட Koratty Infoparkல் ஐபிஎஸ்-ஸின் ஐடி வளாகம் அடுத்த ஆண்டுக்குள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்டுக்கு பிந்தைய சூழ்நிலையில் ஐடி நிறுவனங்களின், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இதே அலுவலகத்தில் இருந்தும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு கலப்பின முறையில் தான் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பல ஆயிரல் மறைமுக வேலை வாய்ப்புகள்
கேரளாவில் உள்ள ஐடி பூங்காக்களில் சுமார் 1.10 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். அதோடு இதன் மூலம் 3.30 லட்சம் பேர் இந்த ஐடி பூங்காக்கள் மூலம் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இது ஐடி ஊழியர்களுக்கு மிக மிக னல்ல விஷயமே.


Click it and Unblock the Notifications