சாந்தமாக இருந்த சங்கல்பங்களைச் செய்யவேண்டிய பூசாரி டர்புர்ரென்று ரேஸ் பைக்கில் பறந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். கேரளத்தின் கோட்டயம் மாவட்டம் மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான உன்னிகிருஷ்ணன். அவருக்கு சொந்தமான குடும்பக் கோயிலான புதுக்குளம்கார தேவி கோயில் மஞ்சூரில் உள்ளது.
தனது தந்தைக்குப்பின் கோயிலைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு உன்னிகிருஷ்ணனுக்கு வந்தது. கோயில் நிர்வாகத்தில் இஷ்டம் இல்லாவிட்டாலும் கடமையின் காரணமாக உன்னிகிருஷணன் சலிப்படையாமல் கோயில் திருப்பணிகளை செய்து வந்தார். அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து பக்தர்கள் தரிசனத்துக்கான வேலைகளை செய்து விடுவார்.

அன்னை துர்காவை பக்தர்களும் சிரத்தையுடன் வந்து வணங்கிச் செல்வர். கோயிலில் காலை அலுவல்கள் எல்லாம் 9.30 மணிக்கெல்லாம் முடிந்துவிடும் என்பதால் அதற்கு மேல்தான் தனது புதிய அவதாரத்தை எடுப்பார் உன்னிகிருஷ்ணன்.
முகத்தில் சந்தனம், குங்குமம், விபூதி அணிந்து பயபக்தியுடன் இருக்கும் உன்னிகிருஷ்ணன் இப்போது லெதர் கிளவுஸ், பூட்ஸ், ஹெல்மெட், ஜாக்கெட் என மோட்டார் சைக்கிள் ரேஸரின் ஜிலுஜிலு காஸ்ட்யூமுக்கு மாறிவிடுவார்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரேஸிங் மீது கடந்த 2007 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஆண்டுதான் டூ வீலர் டிரைவிங் லைசன்ஸை அவர் எடுத்திருந்தார். பின்னர் கொச்சியில் உள்ள ஒரு புரபஷனல் ஸ்டன் ரைடிங் மற்றும் ரேஸிங் கிளப்பில் 2011 ஆம் ஆண்டு சேர்ந்தார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டத்தை வெற்றிகரமாக முடித்த உன்னிகிருஷ்ணன் ஐடி துறையில் நுழைந்து கொச்சியில் உள்ள Xerox நிறுவனத்தில் சிறப்பான பதவியைப் பெற்றார். இருப்பினும் அவரது தீராத பைக் மோகம் ஐடி வேலையை உதறிவிட்டு மீண்டும் பைக் பக்கம் கொண்டு வந்தது. 2013ஆம் ஆண்டில் இந்தியா, நேபாளத்துக்கு பைக் ட்ரிப் சென்றார்.
திடீரென அவரது தந்தை நாராயணன் நம்பூதிரி மறைந்துவிட்டதால் பூசாரி பணியை செய்வதற்காக மீண்டும் சொந்த ஊருக்கு வர நேர்ந்தது. குடும்பச் சூழ்நிலைகள் நெருக்கடி தந்தாலும் அதற்கிடையில் தனது பைக் தாகத்தை பூர்த்தி செய்து வந்தார். 2021 ஆம் ஆண்டு அவர் அதிகாரப்பூர்வமாக புதுக்குளம்கார தேவி கோயிலில் பூசாரி பணியை தொடங்க வேண்டியிருந்தது.
இந்தாண்டு தான் மிகவும் நேசித்த பெடரேஷன் ஆப் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் மோட்டர் ரேஸிங்குக்கான லைசன்ஸைப் பெற்றார். தொடர்ந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்பில் உன்னிக்கிருஷ்ணன் பங்கேற்றார். இதன் மூலம் அவர் புரொபஷனல் பைக் ரேஸர் ஆனார்.
பெங்களூரில் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற விருக்கும் சேறு டிராக் ரேஸில் பங்கேற்க தயாராகி வருகிறார். நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தாலும் அந்தத் தடையை மீறி தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். கோயிலில் கிடைக்கும் ஓரளவு வருமானத்தைக் கொண்டு தனது செலவுகளை சமாளிக்கிறார்.
பக்தியையும் பரபரப்பான ரேஸ் அனுபவத்தையும் கலந்து கட்டி அனுபவித்து வரும் உன்னிகிருஷ்ணனுக்கு தனது கனவான ரேஸ் பைக்கிங்கில் புதிய சாதனையைப் படைக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications