Air Kerala: கேரள அரசின் 19 ஆண்டு கனவு.. துபாய் தொழிலதிபர்களால் நினைவாகிறது..!!

கொச்சி: தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா அரசுக்குச் சொந்தமான மலிவு விலை விமானச் சேவை அளிக்கும் ஒரு விமான நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால் இந்த முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்த காரணத்தால் இதற்கான முயற்சியைக் கைவிட்டது.

இந்த நிலையில் துபாய்-ஐ தலைமையிடமாகக் கொண்ட மலையாள தொழிலதிபர்கள் இருவரின் முயற்சியின் காரணமாகக் கேரள அரசின் "ஏர் கேரளா" நிறுவனத்திற்குப் புத்துயிர் பெற்றது மட்டும் அல்லாமல் முதல் கட்டமாக மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகத்திடமிருந்து (MoCA) தடையில்லா சான்றிதழ் (NOC) பெற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Air Kerala: கேரள அரசின் 19 ஆண்டு கனவு.. துபாய் தொழிலதிபர்களால் நினைவாகிறது..!!

"செட்ஃப்ளை ஏவியேஷன்" (Zettfly Aviation) நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஆஃபி அஹமது மற்றும் அயூப் கல்லாடா ஆகியோர் "விமான பயணத்தை மலிவானதாக மாற்றி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்யும் சேவையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

ஏர் கேரளா திட்டம் முதலில் 2005 ஆம் ஆண்டில் கேரள அரசால் அறிவிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து அதிகப்படியான மக்கள் வளைகுடா நாடுகளில் இருக்கும் காரணத்தால் வருடம் முழுவதும் கேரள விமான நிலையத்தில் பயணிகள் குவிந்துகிடக்கின்றனர். இதை அடிப்படையாக வைத்து ஏர் கேரளா திட்டத்தை இம்மாநில அரசு உருவாக்கியது. இத்திட்டத்தை அரசு அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டது தான் சோகமான விஷயம்.

கேரள அரசு 19 ஆண்டுகளாக ஏர் கேரளா திட்டத்தைச் செயல்படுத்தாமல் இருக்கும் காரணத்தால், இந்த இரண்டு தொழில்முனைவோரும் airkerala.com என்ற டொமைனை (Domain) கேரள அரசிடம் இருந்து வாங்க முயற்சித்தனர். இந்த டொமைன் கிடைத்ததால், விமான சேவையைத் தொடங்கலாம் என முடிவு செய்ததாக ஆஃபி அஹமது மற்றும் அயூப் கல்லாடா கூறுகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்ட ஸ்மார்ட் டிராவல்ஸ் (Smart Travels) என்ற பயண நிறுவனத்தின் நிறுவியுள்ளார் ஆஃபி அஹமது. கண்ணூர் பகுதியைச் சேர்ந்த இவர், சுற்றுலாத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.

மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகத்திடம் என்ஓசி வாங்குவது என்பது முதல் படி மட்டுமே. கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட ஏர் கேரளா நிறுவனம், முதல்கட்டமாகக் கேரளாவிலிருந்து உள்நாட்டு விமானச் சேவைகளை இயக்க திட்டமிட்டு உள்ளது.

இதற்காக ATR 72-600 வகை விமானங்களைப் பயன்படுத்தி மத்திய அமைச்சகத்திடமிருந்து விமான நிறுவனம், ஏர் ஆப்ரேட்டர்ஸ் சான்றிதழ் (AOC) பெற உள்ளது. இந்த பணிகளுக்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகலாம் என்று ஆஃபி அஹமது தெரிவித்துள்ளார்.

ATR 72-600 வகை விமானத்தை வாங்கிய உடன் ஏர் கேரளா சேவை இயங்க துவங்கும், சர்வதேச விமானச் சேவைகளை இயக்குவதற்கு முன்பு, பிராந்திய அளவிலான விமான சேவை மட்டுமே வழங்க உள்ளது. கேரளாவில் மொத்தம் 4 விமான நிலையங்கள் உள்ளது, இதற்கான சேவைகளை மட்டுமே முதல் துவங்க உள்ளது.

இதை தொடர்ந்து தென்னிந்தியாவில் உள்ள மாநில தலைநகரங்களுக்கும், பிற இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுடன் இணைப்பதில் கவனம் செலுத்துவோம் என கூறியுள்ளார் அஹமது. முதல் கட்டமாக மூன்று ஏடிஆர் 72-600 விமானங்களுடன் செயல்பாட்டைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விமானக் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்த பிறகு சர்வதேச வழித்தடங்களில் சேவை வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+