வளைகுடா நாடுகளில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்து கொண்டே இருக்கும் நிலையில், உலக பொருளாதாரத்தில் பெரும் அழுத்தம் உருவாகி வருகிறது. பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில், இந்த போருக்கு உடனடி தீர்வு தெரியாததால் உலகளவில் மந்தநிலை (Recession) உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மார்ச் மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 40% வரை உயர்ந்துள்ளது. இது உலகளவில் எரிபொருள் செலவுகளை பெரிதும் அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு நேரடியாக உற்பத்தி செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும் உயர்த்துவதால், மொத்தமாக பொருளாதார செயல்பாடுகள் மந்தமாகும் அபாயம் உள்ளது.
அமெரிக்காவில் கூட எரிபொருள் விலை 20%க்கு மேல் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சூழலில், அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதத்தை குறைக்குமா, நிலைநிறுத்துமா அல்லது உயர்த்துமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் தற்போதைய நிலவரத்தில், பணவீக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதத்தை குறைப்பது கடினம் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் கருதுகின்றனர்.
அதே நேரத்தில், வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும். இதனால், அமெரிக்கா சில காலம் வட்டி விகிதத்தை "Hold" நிலையில் வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் தேர்வு செய்த கெவின் வார்ஷ் பெடர்ல் ரிசர்வ் தலைவராக வந்தாலும் இதுதான் நடக்கும்.
டிரம்ப் வட்டி விகிதக்கை குறைக்க வலியுறுத்தி வரும் வேளையில் கெவின் வார்ஷ் தற்போதைய சூழ்நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும், ஆனால் அரசியல் காரணத்திற்காக வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் கெவின் வார்ஷ் அப்படியே வைத்திருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகளும் தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவுக்கு ஏற்படும் தாக்கம் என்ன?
உலகளாவிய இந்த அசாதாரண நிலை இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று எச்சரிக்க பரவலாக உள்ளது. குறிப்பாக, FII முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீட்டை வெளியேற்றி வரும் வேளையில் இந்தியாவில் டாலர் பற்றாக்குறை (Dollar shortage) உருவாகும் அபாயம் உள்ளது. ஏற்றுமதி குறையும் நிலையில், இறக்குமதி செலவுகள் அதிகரிக்கும் போது, நாட்டின் Current Account Deficit (CAD) 3.5% வரை உயரக்கூடும்.
இது நடந்தால், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும், பங்குச்சந்தைக்கும் பெரிய அழுத்தம் ஏற்படும். முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாறும் வாய்ப்பு அதிகம்.
மந்தநிலை அபாயம்
AI ஹைப், வரி பிரச்சனை (Trump Tariff), உயர்ந்த எரிபொருள் விலை, வட்டி விகித குழப்பம் ஆகிய அனைத்தும் சேர்ந்து உலக பொருளாதாரத்தில் ஒரு பெரும் பாதிப்பை உருவாக்கும் சூழல்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நிலை நீடித்தால், உலகளவில் மந்தநிலை அதாவது ரெசிஷன் உருவாகும் வாய்ப்பு அதிகம் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், ஈரான் போர் நீடிப்பு உலக பொருளாதாரத்தில் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், வட்டி விகித முடிவுகள் மற்றும் வர்த்தக சமநிலையின்மை ஆகியவை சேர்ந்து, இந்தியா உட்பட பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை சோதிக்கும் கட்டத்தை உருவாக்கியுள்ளன.


Click it and Unblock the Notifications