டெல்லி: மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி செலுத்துவோருக்கு என்ன மாதிரியான சலுகைகளை வழங்க போகிறார் என ஒட்டுமொத்த நாடுமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகலாம் வாய்ப்புள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
2025- 26 ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாட்டில் மக்களின் நுகர்வு போக்கை அதிகரிப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பை ஊக்குவிக்குவது உள்ளிட்டவற்றில் அரசு கவனம்
செலுத்தும் என சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் பல்வேறு
மாற்றங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன்படி ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் கொண்டவர்கள் எந்த ஒரு வரியும் செலுத்தாத வகையில் மாற்றங்கள் வரும் என கூறப்படுகிறது. அதேபோல புதிதாக 25 சதவீதம் என்ற வரி விகிதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறதாம். ஆண்டுக்கு 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்கள் இந்த 25% வரி விகிதத்திற்குள் கொண்டுவர கொண்டுவரப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மிடில் கிளாஸ் பிரிவை சேர்ந்த வரி செலுத்துவோருக்கு சாதகமான அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் அரசு நுகர்வு போக்கை அதிகரிக்கும் வகையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருப்பதால் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமிருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது ஊதியதாரர்களுக்கு ஆண்டுக்கு 75 ஆயிரம் ரூபாய் நிலையான வரி கழிவாக வழங்கப்படுகிறது. இது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கலாம். அதேபோல இந்தியாவில் வேலைக்கு சென்று வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் ஊதியதாரர்களுக்கு குறிப்பிட்ட சில சலுகைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டு கடனுக்கான அசல் மற்றும் வட்டி தொகையில் கூடுதல் வரி கழிவுகள் வழங்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். முன்னதாக ஜிடிஆர்ஐ என்ற அமைப்பு அரசு அளித்த பரிந்துரையில் இந்த பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பை பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்து 5.7 லட்சமாக உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. அதேபோல சேமிப்பு திட்டங்கள் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வழங்கப்படும் வரி விலக்கை 10,000 ரூபாயிலிருந்து 19,450 என உயர்த்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.
தற்போது பழைய வரி கணக்கு நடைமுறையில் பிரிவு 80சி-இன் கீழ் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகை மற்றும் பிஎஃப் பங்களிப்புக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதனை 2.6 லட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டும் என இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளனர் .
Story Written By: Devika


Click it and Unblock the Notifications