சென்னை: தனக்கென ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. செங்கல் முதல் சிமெண்ட் வரை அனைத்து வீடு கட்ட தேவைப்படும் பொருட்களின் விலையும் ஏறிப் போய்விட்டது.
வீடு கட்டுவதற்கு தொடங்கி விட்டாலே, அதற்கு நாம் செய்யும் செலவு எவ்வாறு தான் நம்மை இழுத்து செல்கிறது என்று தெரியாத அளவிற்கு கொண்டு சென்று விடும். இதனை கருத்தில் கொண்டு பலர் தங்களது சொந்த வீட்டை கட்ட ஹோம் லோன் பெற முயற்சிக்கின்றனர். ஆனால் ஹோம் லோன் எடுத்த பிறகு அதனை எவ்வாறு கட்டுவது என்று தெரியாமல் இருக்கின்றனர். எனவே, நீங்கள் ஹோம் லோன் எடுக்கப் போகும் முன்பு, நாம் லோன் வாங்கினால் கட்ட முடியுமா? முடியாதா? என்ற என்று ஆய்வு செய்வது அவசியமானதாகும். அந்த வகையில் நீங்கள் ஹோம் லோன் வாங்குவதற்கு முன்பு சில விஷயங்களைப் பற்றி யோசிப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

டவுன் பேமண்ட்: நீங்கள் வீடு கார் அல்லது வேறு ஏதேனும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க, வங்கிகளில் லோன் பெற அணுகுகிறீர்கள் என்றால், வங்கிகள் உங்களிடம் இருந்து ஒரு தொகையை டவுன் பேமெண்ட் ஆக செலுத்த செய்யும். ஒரு நபரால் அந்த குறிப்பிட்ட தொகையை செலுத்த முடிகிறது எனும் பட்சத்தில் வங்கிகள் தொடர்ந்து அவர்களுக்கு கடன் வழங்க பரிசீலிக்கும். இதனையே டவுன் பேமண்ட் என்று கூறுகிறோம். இவ்வாறு டவுன் பேமண்ட் செலுத்த முடியாத நபர்களுக்கு லோன் கிடைப்பது சற்று கடினம் தான். இந்த டவுன் பேமெண்ட் செலுத்தும் முறை ஒவ்வொரு கடன் வழங்கும் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடலாம். அரசு திட்டங்கள் மூலமாக கடன் பெறும்போது 5% முதல் 10% வரை டவுன் பேமெண்ட் பெறப்படுகின்றன. உங்களிடம் டவுன் பேமெண்ட் செலுத்துவதற்கு சரியான முதலீடு இருக்கிறதா? என்பதை புரிந்து செயல்பட வேண்டும். இதை செலுத்துவதற்காக தனியாக கடன் வாங்குவதும் சரியானதாக இருக்காது. ஏனெனில் நீங்கள், உங்கள் ஹோம் லோன் மற்றும் டவுன் பேமெண்ட் செய்ய வாங்கிய கடனையும் சேர்த்து அடைக்க வேண்டி இருக்கும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துதல்: கிரெடிட் ஸ்கோர் என்பது மூன்று எழுத்து எண் ஆகும். உங்களின் அனைத்து வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளும் இந்த கிரெடிட் ஸ்கோரை வைத்து பார்க்க முடியும். சான்றாக, நீங்கள் வங்கியில் வாங்கிய கடன், அவற்றை நீங்கள் திருப்பி செலுத்திய தேதி, நீங்கள் சிறந்த முறையில் உங்களது கடனை திருப்பி செலுத்தி உள்ளீர்களா என்பதை பற்றிய விவரங்கள், முடிக்கப்பட்ட கடன்கள், நிலுவையில் உள்ள கடன்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த கிரெடிட் ஸ்கோரை வைத்து பார்க்க முடியும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 750 க்கும் மேல் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் தருவதை குறித்து பரிசீலிக்கும். எனவே, ஹோம் லோன் வாங்கும் முன்பு உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக உள்ளதா? என்பதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இதில், ஏதாவது சிக்கல் இருந்தால் அதனை சரி செய்ய முயற்சிகளை செய்ய வேண்டும்.
கடன் விவரங்களை ஆராய்தல்: நீங்கள் ஹோம் லோன் வாங்கும் முன்பு பல்வேறு கடன் வழங்குனர்கள் மற்றும் அவர்கள் ஹோம் லோனுக்கு தரும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் கட்டணங்களை செலுத்தும் தேதி உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கடன் திருப்பி செலுத்துதல்: ஹோம் லோன் பெற்ற பிறகு, அந்த கடனை எவ்வாறு திருப்பி செலுத்த வேண்டும் என்பதை பற்றி முன்னதாகவே சிந்தித்து செயல்பட வேண்டும். தற்போது நீங்கள் வாங்கும் சம்பளத்தை வைத்து EMI கட்டிய பிறகு, உங்களது தின தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா? என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இப்பொழுது நீங்கள் செய்யும் வேலையில் நிரந்தரமாக இருக்கப் போகிறீர்களா? அல்லது வேலையில் ஏதேனும் மாற்றம் செய்யப் போகிறீர்களா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும். உங்களுக்கு வேலைகளில் பிரச்சனை இருந்தால் உங்கள் ஹோம் லோன் குறித்து முடிவெடுப்பதை சற்று தள்ளி போடலாம்.
நிபுணத்துவ ஆலோசனை: நிதி ஆலோசகர்கள் மற்றும் அடமானத் தரகர்கள் போன்றவர்களிடமிருந்து வழிகாட்டுதலை பெறலாம். வீட்டுக் கடன் செயல்முறையை எவ்வாறு திறம்பட வழி நடத்துவது, என்பது பற்றிய விவரங்களை அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள். இதற்காக உங்களிடம் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை அவர்களிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications