சென்னை: வீடு வாங்குவது பெரும்பாலானவர்களின் வாழ்க்கையின் பெரிய கனவுகளில் ஒன்று. சிலர் அதற்காக வீட்டுக் கடன் பெறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்த குழப்பமா.. கவலைப்படாதீர்கள்! இங்கே அவற்றைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, நாம் சில தேவையான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். இந்த ஆவணங்கள் மூலம் கடன் வழங்குபவர்கள் உங்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடுகின்றனர். சுமூகமான முறையில் லோன் பெற, இந்த ஆவணங்கள் அவசியமாகிறது.

அடையாள ஆவணங்கள்:
முதன்மையான ஆவணமாக அரசாங்க ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அவை பின்வருவனவாக இருக்கலாம்.
1. ஆதார் கார்டு
2. பான் கார்டு
3. வாக்காளர் அடையாள அட்டை
4. பாஸ்போர்ட்
5. ஓட்டுநர் உரிமம்
வீட்டுக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது, மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் செல்லுபடி ஆகும் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும், உங்களுடைய டேட் ஆஃப் பர்த் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அப்படி, ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அவற்றை சரி செய்த பின்னர் ஹோம் லோன் பெற விண்ணப்பிக்கவும்.
முகவரி தொடர்பான ஆவணங்கள்:
1. நிலம்/வீட்டு பத்திரம்
2. யூட்டிலிட்டி பில்கள் (மின்சாரம், நீர், எரிவாயு)
3. பாஸ்போர்ட்
4. பேங்க் அக்கவுண்ட் விபரங்கள்
வருமானச் சான்று:
கடனை செலுத்தக்கூடிய தகுதியைத் தீர்மானிக்க கடன் வழங்குபவர்கள் உங்கள் வருமானத்தை மதிப்பிடுகின்றனர். அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. ஊதியம் பெறும் நபர்களாக இருந்தால் சமீபத்திய சேலரி ஸ்லிப் (கடந்த 3 மாதத்திற்கு)
2. ஃபார்ம் 16 அல்லது வருமான வரி அறிக்கைகள் (கடந்த 2 ஆண்டுகளுக்கு)
3. பேங்க் அறிக்கைகள் (சம்பளம் மற்றும் பிற வருமானத்தைக் காட்டும் 6 மாதங்களுக்கான அறிக்கை)
சொத்து ஆவணம்:
நீங்கள் வாங்க விரும்பும் வீடு தொடர்பான ஆவணங்கள்.
1. விற்பனை ஒப்பந்தம்
2. நில அறிக்கை
3. கட்டிட அனுமதி சான்றுகள்
4. வீட்டு வரைபடங்கள்
பிற ஆவணங்கள்:
1. சில நேரங்களில் ஜாயிண்ட் ஹோம் லோன் பெற விண்ணப்பித்திருந்தால், உங்கள் இணை விண்ணப்பதாரரின் விவரங்கள் தேவைப்படும்.
2. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
3. நீங்கள் வேறு ஏதேனும் லோன் பெற்று லோன் ட்ரான்ஸ்பர் பெற நினைத்தால், உங்கள் கடனுக்கு நீங்கள் செலுத்தும் EMI பற்றிய விபரங்கள். இதைத் தவிர பான் கார்டு தேவைப்படலாம்.
வீட்டுக் கடனுக்கு EMI கால்குலேட்டரைப் பயன்படுத்துதல்: ஹோம் லோன் பெறுவதற்கு EMI கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் என்னவென்று பார்ப்போம். நீங்கள் ஒவ்வொரு நிதி நிறுவனம் மற்றும் வங்கிகள் கொடுத்துள்ள EMI கால்குலேட்டரை பயன்படுத்தும் போது, உங்களால் எவ்வளவு EMI தொகை செலுத்த முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதனை நீங்கள் எளிதாக ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
இதில் நீங்கள் பெறக்கூடிய அசல் தொகை, வட்டி சதவீதம் மற்றும் உங்கள் EMI போன்ற விவரங்கள் தெளிவாக காண்பிக்கப்படும். மேலும், மேற்கண்ட ஆவணங்களை சேகரிப்பது உங்களுக்கு ஒரு பெரிய வேலையாகத் தோன்றலாம். ஆனால் அவை அனைத்தும் ஒவ்வொரு நோக்கத்திற்காக உதவுகிறது. கடன் வழங்குபவர்களுக்கு உங்கள் நிதி ஆரோக்கியம், சொத்து விவரங்கள் மற்றும் உங்களுடைய பின்னணி குறித்த விவரங்களை வழங்குவதற்காகத் தான், இது போன்ற ஆவணங்கள் உங்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications