இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதியன்று பல்வேறு சட்ட விதிகள் மாற்றம், நிதி ஒழுங்கு நடைமுறைகள் அமல்படுத்துவது வழக்கமாகி விட்டது.
இந்த ஆண்டும் பல்வேறு மாற்றங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தேசிய அளவில் அமல்படுத்தப்பட உள்ளது.
நிதித்துறையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதற்கு ஏற்ப மக்களும் நிறுவனங்களும் தங்களுக்கு பொருந்தக்கூடிய மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பாஸ்ட்டேக் வாடிக்கையாளர்கள்: 2024 மார்ச் 31 ஆம் தேதிக்குள் பாஸ்ட்டேக் வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி விவரத்தை அப்டேட் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் தங்களுக்குக் கிடைக்கும் சேவைகளைத் தடையின்றி அமைய உறுதி செய்ய வேண்டும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விதித்துள்ள கெடுவின்படி பாஸ்ட்டேக் நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பான் - ஆதார் இணைப்பு: பான் கார்டையும் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இதைச் செய்யத் தவறவிட்டால் பான் கார்டுகள் ரத்து செய்யப்படுவதோடு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின் தாமதக் கட்டணமாக ரூ.1000 செலுத்த நேரிடும்.
இந்த நடவடிக்கை மூலம் வெளிப்படையான நிதி பரிவர்த்தனை மற்றும் மோசடி இல்லாத பண நடவடிக்கைகளுக்கு உறுதி செய்யப்படும். தாமதக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்கு தனிநபர்கள் விரைவாகச் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
ஆட்டோமேட்டடு பிஎப் கணக்கு மாற்றும் திட்டம்: இபிஎப்ஓ தனது சந்தாதாரர்களுக்கு ஆட்டோமேட்டடு பிஎப் அக்கவுன்ட் டிரான்ஸ்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, வேலை மாற்றத்துக்கான மேனுவல் ரிக்வெஸ்ட் திட்டத்தை ரத்து செய்து ஆட்டோமேட்டடு பிஎப் அக்கவுன்ட் டிரான்ஸ்பர் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த அதிரடி திட்டத்தின் மூலம் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தி ஊழியர்களின் கணக்கு மாற்றங்கள் செய்யப்படும்.
புதிய வரி விதிப்புகள்: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வரி விதிப்புகள் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் திட்டங்களை தேர்வு செய்யாத வரிசெலுத்துவோருக்கு இந்தப் புதிய வரி விதிப்பு முறை தானாகவே பொருந்திவிடும். இந்த மாற்றத்தின் மூலம் அரசின் வரி நிர்வாக எளிமைப்படுத்தலையும் வரிசெலுத்துவதற்கு மக்களுக்கு கூடுதல் வசதியும் ஏற்படும்.
ஒப்புதல் மற்றும் தயார்நிலைக்கு முன்னுரிமை: நிதி ஒழுங்குமுறைகளில் வரவிருக்கும் மாற்றங்கள் பொருளாதார நிலப்பரப்பின் மாறும் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் வளர்ந்து வரும் நிதி நிலப்பரப்பை திறம்பட வழிநடத்தவும் முன்முயற்சியுடன் மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏப்ரல் 1, 2024 நெருங்கி வரும் சூழ்நிலையில் சாத்தியமான இடையூறுகளைத் தவிர்க்க மக்கள் இணக்கம் மற்றும் தயார்நிலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நிதிக் களத்தில் வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications