கடந்த ஆண்டில் எதெல்லாம் ரிஸ்கியான முதலீடாக பார்க்கப்பட்டதோ? அதெல்லாம் நல்ல லாபம் கொடுத்துள்ளது. உதாரணத்திற்கு பங்கு சந்தைகள் பெரும் லாபத்தினை கொடுத்துள்ளன.
குறிப்பாக பிஎஸ்இ பவர் செக்டார் 69% லாபத்துடன் டாப் செக்டாராகவும், அதனை தொடர்ந்து பிஎஸ்இ மெட்டல்ஸ் 66%வுடனும், ஐடி துறை 56% ஏற்றத்துடனும், ரியால்டி செக்டார் 55% ஏற்றத்துடனும், கேப்பிட்டல் குட்ஸ் 53% ஏற்றத்துடனும், மற்ற துறை குறியீடுகள் 9 - 50% ஏற்றத்திற்குள்ளாகவும் இருந்தன.
இதே பிஎஸ்இ சென்செக்ஸ் 22% ஏற்றத்துடனும் காணப்படுகின்றன. இதற்கிடையில் ஜியோஜித் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் நல்ல லாபம் கொடுக்க கூடிய துறைகளை பற்றி தெரிவித்துள்ளது. அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
கவனிக்க வேண்டிய துறைகள்
இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் முக்கியவத்துவம் வாய்ந்த துறையாக க்ரீன் எனர்ஜி உள்ளது. ஆக இதன் எதிர்காலம் நிச்சயம் மிக நன்றாக இருக்கலாம் என்பதனை இதிலேயே அறிய முடிகிறது. இதற்கிடையில் புதிய தலைமுறை வணிகங்கள், டெக்னாலஜி அடிப்படையிலான வணிகம், சுகர் மற்றும் ஆன்லைன் அடிப்படையான வணிகங்கள், இவை தவிர முக்கிய வணிகங்கள், வலுவான தேவையை கொண்ட நிறுவனங்கள் என அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.
கணிசமான லாபம் தரும்
பொருளாதாரம் மற்றும் சந்தை மேம்படுத்துதல் தொடர்பான துறைகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன. உதாரணத்திற்கு ஹவுஸிங், வங்கித் துறை, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் கிளவுட் சேவை, டெலிகாம் உள்ளிட்ட துறைகள் கணிசமான லாபத்தினை கொடுக்கலாம்.
ஒருவேளை பொருளாதாரமே கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டாலும், மற்ற துறைகளை காட்டிலும் மேற்கண்ட துறைகளில் சரிவு என்பது குறைவாகவே இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஐடி துறை
ஐடி துறையில் தொடர்ந்து தேவையானது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், இணையம் சம்பந்தமானவை, உள்ளிட்டவற்றிற்கான தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக ஐடி துறையில் வலுவான ஒப்பந்தங்களும் போடப்பட்டு வருகின்றன. இது இத்துறையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கலாம்.
மின்சார வாகனங்கள்
மின்சார வாகங்களுக்கான தேவை என்பது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கின்றது. ஆக இதன் வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கலாம். அரசும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது. ஆக அடுத்து வரும் தசாப்தங்களில் மின்சார வாகனங்களுக்கான தேவை என்பது நிச்சயம் கூடும். ஆக இதனால் இத்துறையானது நீண்டகால நோக்கில் நல்ல வளர்ச்சி காணலாம்..
டெக்னாலஜி, பார்மா & ஹெல்த்கேர்
டெக்னாலஜி, பார்மா, ஹெல்த்கேர் உள்ளிட்ட துறைகள் சற்று மேன்மையடையலாம்.
இதே போல வங்கித் துறையில் தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அடுத்த ஆண்டில் ஒரு எழுச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக கவனிக்கப்பட வேண்டிய துறைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications