ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சாமானிய மக்களின் பாக்கெட்டுகளில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். அந்த வகையில் வருகின்ற டிசம்பர் மாதத்திலும் சில மாற்றங்கள் வரவுள்ளது. தொலை தொடர்பு துறை மாற்றங்கள் முதல் பயண கட்டண மாற்றங்கள் வரை டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள மிக முக்கியமான மாற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
போலி OTP-களை கண்டறிதல்: ஏமாற்றி OTP-களைப் பெற்று பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காகவும் மக்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவும் இந்தியா தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் எங்கிருந்து ஒரு செய்தி அனுப்பப்படுகிறது என்பதை டிராக் செய்யும் வசதியை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இது நிதி மோசடியை குறைத்து நுகர்வோரை பாதுகாப்பாக வைத்திருக்கும். இதை மீறும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு OTP பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க்கை பயன்படுத்தும் மக்கள் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் சேவைகளை பெறும்போது OTP பெறுவதில் தாமதம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
மாதாந்திர எல்பிஜி விலையில் மாற்றம்: ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (OMC) ஒவ்வொரு மாதமும் எல்பிஜி விலையில் மாற்றம் செய்யும். அதே போலவே இந்த டிசம்பர் மாதத்திலும் எல்பிஜி விலையை மாற்றி அமைத்துள்ளது. கடந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் அக்டோபர் மாதத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் கமர்சியல் சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்தது. டிசம்பர் மாதத்திற்கான மாற்றங்கள் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகப்படவில்லை என்றாலும், இந்த மாதமும் இதே விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்: பல வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு ரிவார்ட்கள் மற்றும் சலுகைகளை டிசம்பர் 1 முதல் மாற்றத் திட்டமிட்டு உள்ளன.
எஸ் பேங்க் கிரெடிட் கார்டு: பயனர்களுக்கு விமானம் மற்றும் ஹோட்டல்கள் தொடர்பான ரிவார்ட் புள்ளிகளில் வரம்பு அமைக்கப்பட உள்ளது.
HDFC பேங்க்: ஒரு காலாண்டுக்கு ரூ.1 லட்சம் வரை செலவழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச ஓய்வறை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
SBI மற்றும் ஆக்ஸிஸ் பேங்க்: எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் இணைந்து தங்கள் ரிவார்ட் பாயிண்ட்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்தியுள்ளன.
மாலத்தீவு கட்டணம்: இந்தியாவிலிருந்து மாலத்தீவை சுற்றி பார்க்க செல்பவர்கள் இந்த மாதம் முதல் அதிக விமானக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் எக்கானமி வகுப்பு பயணிகளுக்கான பிளைட் கட்டணம் ரூ.2,532 ரூபாயிலிருந்து ரூ.4,220 ஆக உயர உள்ளது.
அதேபோல பிசினஸ் வகுப்பு பயணிகளின் கட்டணம் 10,129 ரூபாயாக அதிகரித்துள்ளது முன்பு பாதிக்குப் பாதியாக இருந்த விலை இந்த முறை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணிகள் 20,257 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். இதில் சில மாற்றங்கள் ஒவ்வொருவரின் மாத சம்பளத்தில் குறிப்பிடதக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த மாற்றங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொண்டு உங்கள் நிதி திட்டமிடலை செய்வது அவசியம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications