இன்னும் 5 நாட்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. பொதுவாகவே ஒரு மாதம் தொடங்கி விட்டால் பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வரும். அந்த வகையில் வருகின்ற ஜனவரி மாதமும் சில புதிய விதிகள் வர உள்ளன. இந்த விதிகள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் இவை சாமானிய மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்தப் பதிவில் ஜனவரி 2025 முதல் ஏற்பட போகும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்யும். கடந்த சில மாதங்களாக வீட்டில் உபயோகிக்கப்படும் சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சீராக இருந்து வருகிறது. ஆனால் கமர்சியல் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஜனவரி தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

EPFO பென்ஷன் வித்டிராவல்: EPFO மெம்பர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2025 முதல் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் பணம் திரும்ப பெரும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள எந்த வங்கியில் இருந்தும் இனி பென்ஷனை பெற முடியும். இதற்காக எந்தவித கூடுதல் செயல்முறையும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இது பென்ஷன் பெறுபவர்களுக்கு நிவாரணத்தை வழங்கியுள்ளது.
அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்: அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அமேசான் நிறுவனத்தின் புதிய விதிகளின்படி பிரைம் வீடியோவை பெற்றுள்ள ஒரு சப்ஸ்கிரைபர் 5 டிவைஸ்களில் மட்டுமே கணக்கை பயன்படுத்த முடியும். இதில் 2 டிவிகள் உட்பட மீதமுள்ள 3 சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது.
கார்களின் விலை உயர்வு: வருகின்ற ஜனவரி மாதம் முதல் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் காரின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாருதி சுசுகி, ஹூண்டாய் ,மகேந்திரா, ஹோண்டா, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளின் விலையை 3 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரிப்பதை ஈடு செய்யும் வகையில் இந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த இருப்பதாக நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ 123 பே பரிவர்த்தனை வரம்பு: பியூச்சர் போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஆர்பிஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யுபிஐ 123 பேவை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் வரம்பை RBI அதிகரித்துள்ளது. முன்பு இந்த வரம்பு 5000-ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த வரம்பை 10,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த வசதி ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications