வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை வெளியான வருமானவரி துறையின் தகவலின்படி, 2024 முதல் 2025 ஆம் நிதியாண்டுக்கான 5 கோடிக்கும் அதிகமான வருமான வரி செலுத்துவோர் இதுவரை தங்களுடைய ITR-ஐ இ-ஃபைலிங் போர்டல் மூலம் தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு ITR தாக்கல் செய்த நபர்களின் எண்ணிக்கையில் 8 சதவீதம் அதிகமாகும்.
ஜூலை 26-ஆம் தேதி அன்று மட்டும் 28 லட்சம் வருமான வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்துள்ளனர். இது கடைசி நேரத்தில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

ஒரே நேரத்தில் பலரும் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது, சில நேரங்களில் இ-ஃபைலிங் போர்ட்டலில் பிரச்சினை ஏற்படலாம். சமீபத்தில் கூட போர்ட்டலில் பிரச்சனை ஏற்பட்டது என்ற செய்திகளை கேட்டோம். இதற்காக வருமான வரித்துறை ITR செயல்முறையை எந்த இடையூறும் இல்லாமல் வைக்க, இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஜூலை 26-ஆம் தேதி வரை வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் AY 2024-25-க்கான 5 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்-கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர்-களை விட 8% அதிகம். ஜூலை 26-ஆம் தேதியன்று 28 லட்சத்துக்கும் அதிகமான ஐடிஆர்-கள் பெறப்பட்டுள்ளன என்று வருமான வரித்துறை தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது.
வருமானவரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலை இயக்குவதற்கான தொழில் நுட்பக் கூட்டாளியாக இன்போசிஸ் நிறுவனம் உள்ளது. தடையின்றி சேவையை உறுதி செய்வதற்கு வருமானவரித்துறை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் பெயரில் இந்நிறுவனமும் ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கும் நிலையில் தடையின்றி சேவை அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.
2024 முதல் 2025-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024 ஆகும். சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்களின் நிறுவனமான ICAI-யால் டெல்லியில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், இ-ஃபைலிங் போர்ட்டலில் பிழைகள் இருப்பது குறித்த கவலைகள் எழுந்தன.
இதற்கு பதிலளித்த வருமான வரித்துறையின் தலைவர் ரவி அகர்வால், சேவை வழங்குநர்களுடன் இணைந்து வருமான வரித்துறை போர்ட்டல் சரியாக செயல்படுவதை உறுதி செய்வோம்.
இன்ஃபோசிஸ், IBM மற்றும் ஹிட்டாச்சி போன்ற சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ITR தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே இணையதளம் சரியாக செயல்படும் என்று சேவை வழங்குநர்கள் உறுதியளித்துள்ளதாக அகர்வால் கூறினார்.


Click it and Unblock the Notifications