இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். 2025-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புதிய படிவங்களில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் வருமான வரி செலுத்துபவர்கள் ஈ-ஃபைலிங் போர்ட்டலில் புதிய படிவங்கள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும். இன்றையப் பதிவில் இந்த ஆண்டு வருமான வரி அறிக்கை படிவங்களில் செய்யப்பட்டுள்ள 7 முக்கிய மாற்றங்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
ITR 1 மற்றும் ITR 4 ஐ தாக்கல் செய்வதற்கான தகுதி விரிவாக்கம்: இந்த ஆண்டு வருமான வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 போன்ற படிவங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யும் தகுதி அளவுகோலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி மியூச்சுவல் ஃபண்ட் நிதிகளில் இருந்து நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்துவோர் ரூ.1.25 லட்சத்தை தாண்டாத பட்சத்தில் ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 போன்ற படிவங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாம்.

ஆதார் என்ரோல்மென்ட் ஐடி ஏற்றுக் கொள்ளப்படாது: 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களில் இந்த மாற்றமும் ஒன்று. அதாவது இனி பான் விண்ணப்பத்திற்கு ஆதார் எண்ட்ரோல்மென்ட் ஐடி ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதேபோல வருமானவரி தாக்கல் செய்வதற்கும் ஆதார் நம்பருக்கு பதிலாக ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தி தாக்கல் செய்ய முடியாது. இந்த ஆண்டு வருமான வரி படிவங்கள் அதாவது ஐடிஆர் 1, ஐடிஆர் 2, ஐடிஆர் 3 மற்றும் ஐடிஆர் 5 போன்ற படிவங்களில் ஆதார் எண்ட்ரோல்மென்ட் நம்பரை வழங்குவதற்கான இடம் நீக்கப்பட்டுள்ளன.
வரிமுறையைத் தேர்ந்தெடுக்கும் வசதி: வணிகத்தின் மூலம் வருமானம் பெறும் வரி செலுத்துவர்கள் தனி நபர்களைப் போல ஒவ்வொரு நிதியாண்டும் புதிய வரிமுறை மற்றும் பழைய வரிமுறைக்கு மாற்றம் செய்ய முடியாது. வருமான வரித் துறையின் விதிகளின்படி வணிகங்களின் மூலம் வருமானம் பெறுபவர்கள் பழைய வழிமுறையிலிருந்து புதிய வழிமுறைக்கு மாற விரும்பினால் ஒரு முறை மட்டுமே மாற முடியும். அதற்கும் வருமான வரித்துறைக்கு படிவம் எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.
ITR படிவத்தில் TDS-ஐ குறிப்பிடுதல்: இந்த முறை வருமான வரி செலுத்தும் போது, அது எந்த படிவமாக இருந்தாலும் சரி அதில் வரி செலுத்துவோர் 2025-ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்தில் எந்த டிடிஎஸ் பிரிவின் கீழ் வரி கழிக்கப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மூலதன ஆதாய வரிகளில் மாற்றம்: 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டது. அதன் படி பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், வீடு, நிலம் அல்லது வேறு ஏதேனும் மூலதன சொத்துக்களை விற்பதன் மூலம் வருமானம் பெற்றிருந்தால் சரியான தொகையையும் அதற்கான வரியையும் கணக்கிட கண்டிப்பாக விற்பனை தேதியை தெரிவிக்க வேண்டும்.
ரூ. 1 கோடியைத் தாண்டினால் சொத்து விபரங்கள் கட்டாயம்: ரூ. 50 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறும் வரி செலுத்துவோருக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இனி மொத்த வருமானம் ரூ.1 கோடியைத் தாண்டினால் தான் வரி செலுத்துபவர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பிற பொறுப்புகள் பற்றி தெரிவிக்க வேண்டும்.
பிரிவு 80DD மற்றும் 80U-இன் கீழ் விலக்கு கோருவதற்கான ஊனமுற்றோர் சான்றிதழ்: வருமான வரி செலுத்துபவர்கள் பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்து ஊனமுற்ற நபர்களுக்காக செலவு செய்திருந்தால் பிரிவு 80DD மற்றும் 80U-வின் கீழ் வரி விலக்கு கோர முடியும். இந்த ஆண்டு வரி விலக்கு கோரும் போது ஊனமுற்றோர் சான்றிதழின் அக்னாலேஜ்மென்ட் நம்பரை குறிப்பிடுவது முக்கியம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications