மக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்கச் சமூக வலைத்தளம் மிகவும் முக்கிய இடமாக மாறியுள்ள நிலையில், நல்ல விஷயமாக இருந்தாலும், சரி தவறான விஷயமாக இருந்தாலும் சரி சமூக வலைத்தளம் மூலம் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் காஷ்மீர் ஒற்றுமை தினம் குறித்து முன்னணி நிறுவனங்கள் செய்த பதவிகள் தற்போது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் தத்தம் பிராண்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறனர்.
காஷ்மீர் ஒற்றுமை தினம்
காஷ்மீர் ஒற்றுமை தினத்தன்று காஷ்மீர் விடுதலையை ஆதரித்துப் பாகிஸ்தான் நாட்டின் ஹூண்டாய், கியா மோட்டார்ஸ் டிவிட்டர் கணக்குகளில் பதிவு செய்த நிலையில், இந்தியாவில் இவ்விரு நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் யாரும் ஹூண்டாய், கியா மோட்டார்ஸ் கார்களை வாங்க கூடாது என்றும் மக்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தனர்.
கேஎப்சி மற்றும் பீட்சா ஹட்
இதே போலவே பிரபல உணவகங்களான கேஎப்சி மற்றும் பீட்சா ஹட் நிறுவனங்களும் பதிவிட்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் வர்த்தகம் செய்யும் பீட்சா ஹட் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கான Pizzahutpak நாங்கள் உங்களுடன் ஆதரவாக நிற்கிறோம். காஷ்மீர் ஒற்றுமை தினம் என்று பதிவிட்டு இருந்தது.
BoycottKFC BoycottPizzaHut டிரென்டிங்
மேலும் கேஎப்சி காஷ்மீர் ஒற்றுமை தினத்திற்கு ஆதரவாகப் பதிவு செய்திருந்த நிலையில், #BoycottKFC ஹேஷ்டேக் டிரென்டாகத் துவங்கியதும், பதிவை நீக்கிவிட்டது, ஆனால் Pizzahutpak இண்ஸ்டாகிராம் பதிவை நீக்கவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக BoycottKFC BoycottPizzaHut டிரெண்டிங்கில் உள்ளது.
கேஎப்சி மன்னிப்பு
தற்போது கேஎப்சி இந்தியா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இந்தியாவிற்கு வெளியே இருக்கும் கேஎப்சி சமுக வலைத்தளத்தில் செய்யப்பட்ட பதிவுகளுக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இந்தியாவைப் பெருமையுடன் மதிக்கிறோம், மேலும் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையுடன் சேவை செய்வதற்காக உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
பீட்சா ஹட் விளக்கம்
சமூக ஊடகங்களில் பரவும் ஒரு பதிவின் உள்ளடக்கங்களை மன்னிக்கவோ, ஆதரிக்கவோ அல்லது உடன்படவோ இல்லை. எங்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பெருமையுடன் சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். என்று பிட்சா ஹட் விளக்கம் கொடுத்துள்ளது.
YUM பிராண்ட்ஸ்
அமெரிக்காவில் YUM பிராண்ட்ஸ் கீழ் தான் கேஎப்சி மற்றும் பீட்சா ஹட் உள்ளது. YUM பிராண்ட்ஸ் வாயிலாகத் தான் இவ்விரு நிறுவனங்களும் பிரான்சைஸ் முறையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற உலக நாடுகளில் வர்த்தகம் செய்கிறது. YUM பிராண்ட்ஸ் கீழ் டேகோ பெல் நிறுவனமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications