தூத்துக்குடி: உணவு பாதுகாப்பு என்பது பொதுமக்களின் நலனுடன் தொடர்புடைய முக்கியமான விஷயம். தரமற்ற உணவை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும். இது போன்ற தவறுகளைத் தடுத்து நிறுத்துவதற்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடியில் இயங்கி வந்த பிரபல உணவு கடை ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்க்கெட்டில் இயங்கி வந்த கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) கடை ஒன்றின் உரிமத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

கெட்டுப்போன அல்லது பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சுத்திகரிப்பதற்கு தடை செய்யப்பட்ட மக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் (magnesium silicate-synthetic) பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
FSSAI விதிமுறைகளின் படி பயன்படுத்தப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அதனை மீண்டும் சுத்திகரிப்பதற்காக மக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பயன்படுத்தப்பட்டது FSSAI அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த KFC யூனிட்டின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
KFC-யில் பிரபலமாக விற்கப்படும் அவர்களுடைய ப்ரைட் சிக்கனுக்கு (Fried chicken) எக்கச்சக்க பேன் பேஸ் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்நிறுவனத்தில் வழங்கப்படும் ஃப்ரைட் சிக்கன்களை விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிந்தடிக் பொருள் காரணமாக மக்களிடையே, தாங்கள் உண்ணும் உணவு குறித்து பெரும் பயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், FSSAI அதிகாரிகள் 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் மற்றும் 45 லிட்டர் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். 12 மணி நேரத்திற்கு முன்பு வறுத்த 56 கிலோ சிக்கனையும் பறிமுதல் செய்தனர். மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் மூலம் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரி மற்றும் கோழியின் மாதிரிகள் ஆய்வக ஆய்வுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறையினர், மறு உத்தரவு வரும் வரை, தூத்துக்குடியில் இயங்கி வரும் KFC யூனிட்டின் FSSAI உரிமத்தை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பானிபூரி ஸ்டால்களில் செயற்கை கலரிங் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாள் ஆய்வில், பானிபூரி மற்றும் பானிபூரி மசாலாவின் தலா மூன்று மாதிரிகள் ஆய்வக ஆய்வுக்காக கொடுக்கப்பட்டன.
உணவு பாதுகாப்பு துறையின் இந்த தீவிர நடவடிக்கை, உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கையாக அமையும். மேலும், தரமான உணவை உட்கொள்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்கு உணவு பாதுகாப்பு துறை தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications