முதலீட்டாளர்கள் ஏமாற்றிய KFin டெக்னாலஜிஸ் ஐபிஓ.. 3% வரை சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

KFin டெக்னாலஜிஸ் பங்குகள் கடந்த வாரம் IPO முடிந்த நிலையில் வியாழக்கிழமை பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் மந்தமான விலையில் பட்டியலிடப்பட்டன.

இன்று உள்நாட்டுச் சந்தையின் மந்தமான வர்த்தகம் மத்தியில் பட்டியலிடப்பட்ட KFin டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்வுடன் துவங்கினாலும் சரிவைச் சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்களை இழப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

KFin டெக்னாலஜிஸ் பங்குகளின் ஐபிஓ விலையான 366 ரூபாய் ஒப்பிடும்போது, மும்பை பங்குச்சந்தையில் 369 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்தப் பங்குகள் அடுத்த சில நிமிடத்தில் 3 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

IPO: இன்று KFin டெக் ஐபிஓ.. ரூ.1500 கோடி திட்டம்.. முதலீடு செய்யலாமா? IPO: இன்று KFin டெக் ஐபிஓ.. ரூ.1500 கோடி திட்டம்.. முதலீடு செய்யலாமா?

KFin டெக்னாலஜிஸ்

KFin டெக்னாலஜிஸ்

KFin Tech இன் பங்குகள் இன்று கிரே மார்கெட்டில் 5 ரூபாய் தள்ளுபடி விலையில் வர்த்தகம் செய்யப்பட்டதால், KFin டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்னதாகவே சந்தையில் மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்யும் எனக் கணிக்கப்பட்டது.

இந்தியப் பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை

இன்று இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட KFin டெக்னாலஜிஸ் பிளாட்-டு-பாசிட்டிவ் லிஸ்டிங்காக தேசிய பங்குச்சந்தையில் 367 ரூபாய் என்ற அதன் வெளியீட்டு விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.

ஐபிஓ
 

ஐபிஓ

KFin டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வில் நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் ஆவரேஜ் ரெஸ்பான்ஸ் மட்டுமே கிடைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஐபிஓ வெளியிட்டுப் பட்டியலிடப்பட்ட நிறுவனம் அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 3 சதவீதம் வரையில் சரிந்தது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிதி சேவை தளம்

நிதி சேவை தளம்

KFin டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒரு முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிதி சேவை தளமாகும். இது நீண்டகால வாடிக்கையாளர் உறவுகளின் நன்மையைக் கொண்டுள்ளது, மேலும் அதன் asset-light business model ஒரு பெரிய பிளஸ் ஆக உள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் நிதி முடிவுகள் கலவையாக உள்ளது மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் உள்ளது.

நிதி நிலை

நிதி நிலை

KFin டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் சமீப காலத்தில் உயர்ந்திருந்தாலும் 2020 ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மார்ஜின் அளவுகள் குறைந்தன. மேலும் இது 2021 ஆம் நிதியாண்டில் நஷ்டத்தையும் சந்தித்தது.

1,500 கோடி ரூபாய்

1,500 கோடி ரூபாய்

KFin tech நிறுவனத்தின் ஐபிஓ மூலம் சுமார் 1,500 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்ட நிலையில், ஐபிஓ விற்பனையில் சுமார் 2.59 மடங்கு பங்குகளுக்கு முதலீடுகள் குவிந்தது. தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவிலான விருப்பத்தை வெளிப்படுத்தினர். இப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சுமார் 417% பங்குகளுக்கு முதலீடு குவிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ipo ஐபிஓ
English summary

KFintech IPO: Shares debut higher But post 3 percent fall

KFintech IPO: Shares debut higher But post 3 percent fall
Story first published: Thursday, December 29, 2022, 13:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X