உலகிலேயே அதிக பாலோவர்களை கொண்ட டிக்டாக் ஸ்டாராக இருக்கும் கேபி லேம் (Khaby Lame) 975 மில்லியன் டாலர் மதிப்பிலான மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் சேஷியல் மீடியா இன்ப்ளூயன்சர்களின் புது அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஈகாமர்ஸ் தளம் சேஷியல் மீடியா இன்ப்ளூயன்சர்களை அதிகளவில் சார்ந்து இருக்க துவங்கியிருக்கும் வேளையில், Khaby Lame-ன் இந்த ஒப்பந்தம் பல சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு புதிய வருமானம் ஈட்டும் பிரிவாக மாறப்போகிறது. குறிப்பாக செலிப்ரிட்டிகள் இனி வரும் காலத்தில் இது முக்கிய வருமானம் ஈட்டும் ஒப்பந்தமாக மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Khaby Lame செய்துள்ள இந்த ஒப்பந்தம் இனி இன்ஃப்ளூயன்சர் பிராண்டுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இணைந்து மிகப்பெரிய வணிகமாக மாறும் போக்கை வெளிப்படுத்துகிறது.
பிரபல ஊடக நிறுவனமான ரிச் ஸ்பார்கிள் ஹோல்டிங்ஸ் (Rich Sparkle Holdings) கேபி லேமின் முக்கிய நிறுவனத்தை முழுமையாக வாங்கியுள்ளது. இது பெரிய விஷயமில்லை, இந்த ஒப்பந்தத்தில் கேபி லேம்-ன் தனிப்பட்ட பிராண்ட், Face ID, Voice ID, Behavioral models உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இந்நிறுவனம் வாங்கியுள்ளது.

இதன் மூலம் Rich Sparkle Holdings நிறுவனம் கேபி லேமின் டிஜிட்டல் டிவின்ஸ்-ஐ உருவாக்க முடியும். அவருடைய முகம், குரல் வைத்து எந்த பொருட்களை வேண்டுமானாலும், எந்த தளத்திலும் விற்கலாம், மார்கெட்டிங் செய்யலாம். இந்த ஒப்பந்தம் கேபி லேமின் டிஜிட்டல் அடையாளத்தை AI மூலம் பெருமளவில் பயன்படுத்தி பணம் ஈட்டும் திட்டத்தின் ஆரம்ப புள்ளியாக உள்ளது.
கேபி லேம் 2020இல் கொரோனா காலத்தில் தனது வேலையை இழந்த பிறகு, பொழுதுபோக்கிற்காக டிக்டாக்கில் வீடியோக்களை பதிவிடத் தொடங்கினார். அவர் பேசாமல் வீடியோவை பதிவிட்டாலும், அவருடைய ரியாக்ஷன் மக்களுக்கு மிகவும் பிடித்து போகவே உலகம் முழுவதும் பிரபலமடைந்தன.
குறிப்பாக "லைஃப் ஹேக்" வீடியோக்களை கிண்டலடிக்கும் அவரது பாணி எந்த மொழியிலும், எந்த கலாச்சாரத்திலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. இதனால் குறைந்த காலத்திலேயே பிரபலமடைந்து அவர் 350 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்களை பெற்றார்.

இப்படி சமூக ஊடகத்தில் உச்சத்தில் இருக்கும் கேபி லேம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த மாபெரும் ஏஐ ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதனால் என்ன நடந்துவிட போகிறது என கேட்கலாம்.
இந்த ஏஐ டிவின் (AI Twin or Digital Twin) மூலம் தற்போது கேபி லேம், ஒரே நேரத்தில் ஷாங்காயில் ஸ்னீக்கர் ஷூகளை விற்பனை செய்ய முடியும், சாவோ பாலோவில் ஸ்கின்கேர் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும், லாஸ் ஏஞ்சல்ஸில் பிராண்ட் ஒப்பந்தங்களை செய்ய முடியும், இந்தியாவில் ஐபிஎல் விளம்பரத்தில் நடிக்க முடியும், துபாயில் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக இருக்க முடியும்.
தற்போது பிராண்டுகள் இந்த டிஜிட்டல் டிவின்-ஐ பயன்படுத்த, ஒரு விளம்பரத்திற்கு 1 மில்லியன் டாலர் செலுத்துகின்றன. இது வெற்றி அடையும் பட்சத்தில் இந்த தொகை அதிகரிக்கும், இதேவேளையில் கேமி லேம் தனிப்பட்ட முறையிலும் விளம்பரத்திலும், முக்கிய விழாக்களிலும் கலந்துக்கொள்வார். இதற்கு தனிப்பட்ட முறையில் சம்பாதிக்க முடியும்.
மேலும் ஏஐ உதவியுடன் பல மொழிகளில் விளம்பரம் உருவாக்கலாம், விர்ச்சுவல் லைவ்ஸ்ட்ரீம்கள் நடத்தலாம், அவரது உருவத்தை உலகம் முழுவதும் பயன்படுத்தலாம். இது ஏஐ எழுச்சி காரணமாக விளம்பர உலகில் பெரும் மாற்றத்தை கொண்டுவரலாம்.
ரிச் ஸ்பார்கிள் ஹோல்டிங்ஸ் உடனான இந்த கூட்டணி ஆண்டுக்கு 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கிறது. பொழுதுபோக்கு, விளம்பரம், டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றில் கேபி லேமின் புகழை பயன்படுத்தி இது சாத்தியமாகும். இந்த ஒப்பந்தம் உலகளாவிய இன்ஃப்ளூயன்சர் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இன்ஃப்ளூயன்சர்கள் இப்போது தங்கள் புகழை AI மூலம் பணமாக மாற்றுகின்றனர். கேபி லேம் போன்றவர்கள் தங்கள் டிஜிட்டல் அடையாளத்தை விற்று பெரும் தொகை பெறுகின்றனர். இது எதிர்காலத்தில் பல இன்ஃப்ளூயன்சர்களுக்கு புதிய வருமான வழியாக இருக்கும். ஆனால் AI உருவாக்கும் கண்டென்ட் எவ்வளவு உண்மையானது, அது பார்வையாளர்களை எப்படி பாதிக்கும் என்பது புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications