2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் வருவாய் ரூ. 1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்று காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (KVIC) தலைவர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். இதனால், 10.17 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும் மனோஜ் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவில் முதன்முறையாக, காதி மற்றும் கிராமப் பொருட்களின் விற்பனை ரூ. 1.5 லட்சம் கோடியைத் தாண்டி ரூ. 1.55 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இந்த செயல்திறனை கருத்தில் கொண்டு, ஊக்கமளிக்கும் வகையில் 2024 முதல் 2025-ஆம் ஆண்டிற்கான விற்பனை இலக்கை ரூ. 1.75 லட்சம் கோடியாக நிர்ணயித்துள்ளோம்" என்று மனோஜ் குமார் கூறியுள்ளார்.

2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் KVIC-இன் பல்வேறு சாதனைகளை விவரித்த மனோஜ் குமார், கிராமப்புற கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்பட்ட காதி மற்றும் கிராமிய தயாரிப்புகளின் விற்பனை 2013 முதல் 2014-ஆம் நிதியாண்டில் ரூ.31,154 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அவை 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளின் உற்பத்தி 315 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 முதல் 2014-ஆம் ஆண்டில் ரூ. 26,109 கோடியாக இருந்த உற்பத்தி, 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் ரூ.1,08, 298 கோடியாக அதிகரித்துள்ளது.
அதே போல 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் 10.17 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இது 2013 முதல் 2014 நிதியாண்டில் உருவாக்கப்பட்ட 5.62 லட்சம் புதிய வேலைகளை விட 81 சதவீதம் அதிகமாகும். விற்பனை, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த இந்த செயல்திறன் புள்ளிவிவரங்கள், 'மேக் இன் இந்தியா', 'உள்ளூர்களுக்கான குரல்' மற்றும் 'சுதேசி தயாரிப்புகள்' ஆகியவற்றில் நாட்டு மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ள்ளதை சுட்டிக் காட்டுகிறது.
KVIC, ONDC தளத்தின் கீழ் காதி மற்றும் கிராமிய தயாரிப்புகளை கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் காதி துணிகள் விற்பனை ரூ. 6,496 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், 2013 முதல் 2014-ஆம் நிதியாண்டில் விற்பனையான ரூ. 1,081 கோடியை விட, இது 500 சதவீதம் அதிகம் என்றும் குமார் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications